India

“கார்ப்பரேட்டுகளை வங்கிகள் நடத்த அனுமதிப்பது பேராபத்தை உண்டாகும்” : ரகுராம் ராஜன் - விரால் எச்சரிக்கை!

இந்திய ரிசர்வ் வங்கியின் உள்புற செயல்பாட்டுக் குழு, கடந்த வாரம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் கண்டனம் எழுந்து வருகிறது. அதாவது, கார்ப்பரேட் தொழில் நிறுவனங்கள் இனி வங்கிகளை தொடங்கலாம், அதனை நடத்திக்கொள்ளாலம் என்று அந்த அறிவிப்பில் உள்ளது.

ஏற்கனெவே வங்கிகளில் கடன் வாங்கி பல கார்ப்பரேட் நிறுவனங்கள் திருப்பி செலுத்தாத நிலையில், அந்த கார்ப்பரேட் நிறுவனமே வங்கி தொடங்குவது வேடிக்கையானது என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் மற்றும் முன்னாள் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா ஆகியோர் இனைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், “பொருளாதார நெருக்கடியால், ஐ.எல்.&எப்.எஸ் (IL&FS) மற்றும் ‘யெஸ்’ (YES) வங்கிகளின் தோல்விகள் நம்கண் முன் உள்ளன.

அதற்கு முன்பே, வங்கியியலில், கார்ப்பரேட் ஈடுபாடு குறித்து நாம் பரிசோதித்து பார்த்து விட்டோம். ஆனால், அந்த அனுபவங்களிலிருந்து நாம் கற்றுக் கொண்டதாக தெரியவில்லை. பல வங்கிகள் அடுத்தடுத்து திவாலாகி வருவதுடன், வராக்கடனிலும் சிக்கித் தவிக்கும் நிலையில், இப்போது எதற்காக இந்த முடிவு?

நிறைய வங்கிகளைத் திறப்பது அரசாங்கத்துக்கு அவசியமானது என்றாலும் கார்ப்பரேட் தொழில் நிறுவனங்களை வங்கிகள் தொடங்க அனுமதிப்பது புத்திசாலித்தனமான யோசனை அல்ல. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வங்கி நடத்தும் உரிமங்கள் வழங்கப்பட்டால், அந்நிறுவனங்களிடம் பொருளாதார அதிகாரங்கள் குவிக்கப்படும்.

அதேப்போல், இந்தியாவில் வர்த்தகம் மற்றும் தொழிற்துறை நிறுவனங்களே கடனில்தான் இருக்கின்றன. தற்போது அந்த நிறுவனங்களே வங்கிகளை நடத்தும்போது, தங்களுக்கு தேவையான கடன்களை, எந்தக் கேள்வியுமின்றி, தங்களுடைய வங்கிகளிலிருந்தே அவர்கள் பெற்றுக் கொள்வார்கள். ஒரு கடனாளரால் நடத்தப்படும் வங்கியானது, எப்படி ஒரு நல்ல கடனை வழங்கமுடியும்?

ரிசர்வ் வங்கி போன்ற மத்திய வங்கி அமைப்புகளுக்கு அனைத்து விதமான தகவல்கள், உலக நாடுகளின் பொருளாதார புள்ளிவிவரங்கள் தெரிந்த நிலையிலும்கூட, அந்த வங்கிகள் கொடுக்கும் மோசமான கடனை கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்நிலையில், தொழில் நிறுவனங்களையே வங்கிகள் நடத்த அனுமதிப்பது, முறையற்ற கடன்கள் மற்றும் பல்வேறு மோசடிகளுக்கே வழிவகுக்கும்” எனத் தெட்