India
“கொரோனா பாதிப்பு 91.39 லட்சத்தை தாண்டியது” : கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மோடி அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று. வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 44,059 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இதனையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 91,39,865 ஆக உயர்ந்திருக்கிறது. அதேபோல் ஒரே நாளில் 511 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததை அடுத்து 1,33,738 பேர் இந்தியாவில் கொரோனாவுக்கு பலியாகியிருக்கிறார்கள்.
மேலும், ஒரே நாளில் 41,024 பேர் குணமடைந்திருக்கிறார்கள். இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 85,62,641 ஆக ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து, 4,43,486 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதேவேளையில், குணமடைந்தோர் விகிதம் 93.69% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.46% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 4.85% ஆக குறைந்துள்ளது.
இந்த நிலையில், இன்று டெல்லியில் இருந்தப்படி காணொலி காட்சி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்துக்கு கொரோனா தடுப்பு மருந்துகள் வழங்குவது குறித்து முதல்வர் பழனிசாமியுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார்.
Also Read
-
“பெண்கள் உயர்ந்து நடைபோட உரிமைத் தொகையும் உயரும்; உரிமையும் உயரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம்
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!