India

மாநிலங்களுக்கு நீட் தேர்வில் விலக்களிக்க மறுத்து மத்திய கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் தனி தேர்வா? #INICET

மருத்துவ முதுநிலைப் படிப்புகளுக்கான நீட் தேர்விலிருந்து மாநிலங்களுக்கு விலக்களிக்க மறுக்கும் மத்திய பா.ஜ.க அரசு, மத்திய அரசின் கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் தனி நுழைவுத்தேர்வை நடத்தவிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எம்.டி., எம்.எஸ் உள்ளிட்ட உயர் மருத்துவ படிப்புகளில் சேர INI-SET என்ற தனி நுழைவுத்தேர்வை மத்திய பா.ஜ.க அரசு நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட 11 கல்லூரிகளுக்கு நாட்டின் சீர்மிகு கல்வி நிறுவனங்கள் என அந்தஸ்து அளித்து ‘INI-SET' எனும் பெயரில் தனி நுழைவுத்தேர்வை மத்திய அரசு நடத்துகிறது.

நீட் தேர்விலிருந்து மத்திய அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் விலக்கு அளித்துவிட்டு, மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்க மறுப்பது, மாநில உரிமைகளை அப்பட்டமாகப் பறிக்கும் செயல் எனக் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

நீட் தேர்விலிருந்து விலக்கு பெற விரும்பும் மாநிலங்களுக்கு, நீட்டிலிருந்து விலக்களிக்க, தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரவேண்டும் என மருத்துவ மாணவர்களும், எதிர்க்கட்சியினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

Also Read: “முறைகேடில்லாமல் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை ஆன்லைனில் நடத்துக” - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!