India
“தொடரும் நீட் தேர்வு முறைகேடு - OMR சீட்டில் சந்தேகம்” : மோடி அரசு பதிலளிக்க குஜராத் ஐகோர்ட் உத்தரவு !
தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் 13-ம் தேதி நடைபெற்றது.
ஏழைகளுக்கு மருத்துவப் படிப்பை எட்டாக்கனியாக்கும் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் மட்டும் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். உயிர் குடிக்கும் நீட் தேர்வுக்கு எதிராக நாடே கொந்தளித்த போது, பா.ஜ.க அரசு பிடிவாதமாக தேர்வை நடத்தியது.
தேர்வு முடிவுகள் வெளியான நாள் அன்றே இணையத்தில் பல குளறுபடிகள் ஏற்பட்டது. இந்நிலையில், தேர்வு முடிவுகளை பார்க்கும் போது மொத்த தேர்வு எழுதியவர்களுக்கும், தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விகிதம் மற்றும் எண்ணிக்கையில் மிகப் பெரிய குளறுபடி இருந்ததும் அம்பலமானது.
அதுமட்டுமல்லாது, நீட் ஓ.எம்.ஆர். விடைத்தாள்கள் தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும் புதிய சர்ச்சை எழுந்துள்ளது. வெளியான நீட் தேர்வு முடிவுகளில் ஓ.எம்.ஆர். விடைத்தாள்கள் தன்னுடையது இல்லை என தமிழகத்தில் மட்டும் 5க்கும் மேற்பட்ட மாணவர்கள் புகார் அளித்தனர்.
ஆனால், புகாரை பரிசிலினை செய்யாமல், “நீட் தேர்வு முடிவுகளில் தவறு இருப்பதாக தேர்வு எழுதியவர்களில் சிலர் பத்திரிக்கைகளிலும், சமூக வலைதளங்களிலும் பொய்யான தகவல்களை பதிவிட்டு வருகின்றனர். அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், உண்மையான புகார்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படும்” என புகார் அளிக்க வரும் மாணவர்களை எச்சரிக்கை விதமாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டது. இந்நிலையில், நீட் தேர்வு விடைத்தாளில் மாற்றங்கள் செய்யப்பட்டு பெயர், கையொப்பம் மீண்டும் எழுதப்பட்டிருப்பதாக கூறி, குஜராத் மாணவர் தொடர்ந்துள்ள வழக்கில், மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமை பதிலளிக்க குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஜெய்வீர்சிங் என்ற மாணவர், நீட் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி, அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், தமது விடைத்தாளில் மாற்றங்கள் செய்யப்பட்டு பெயர், கையொப்பம் மீண்டும் எழுதப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். விடைத்தாள் நகலை பெற்று பார்த்தபோது மொத்தம் 672 மதிப்பெண்களுக்கு பதிலாக 354 மதிப்பெண் மட்டுமே வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறியிருந்தார்.
மேலும் நீட் தேர்வு முறைகேட்டால் மனுதாரர் மட்டுமின்றி பல மாணவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட குஜராத் உயர்நீதிமன்றம், மத்திய அரசும், தேசிய கல்வி வாரியமும், சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வரும் இதுகுறித்து உரிய பதிலளிக்கவேண்டும் எனக் கூறி உத்தரவிட்டுள்ளது.
Also Read
-
“அமைதியும் எளிமையுமிக்கவர்... திரைப்பாசம் குடும்ப பாசமானது..” - AVM சரவணன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!
-
சென்னை மாநகர செரீப்.. எழுத்தாளர்... தயாரிப்பாளர்... பன்முக கலைஞர் AVM சரவணன் காலமானார்!
-
SIR பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள இதுவே நோக்கம்... புட்டுப்புட்டு வைத்த முரசொலி தலையங்கம்!
-
‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கான நிதியை 34% குறைத்தது ஏன்?: ராஜாத்தி சல்மா எம்.பி கேள்வி!
-
“ஆசிரியர்கள் பற்றாக்குறையைத் தீர்க்க ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!