India
“தமிழகத்தில் பட்டாசு வெடிக்க தடையில்லை... டெல்லியில் பசுமை பட்டாசு கூட வெடிக்கக்கூடாது” - N.G.T ஆணை!
டெல்லியில் பசுமை பட்டாசு உள்ளிட்ட அனைத்து வகை பட்டாசுகளையும் விற்கவும், வெடிக்கவும் முழுதடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இன்று தேசிய பசுமை தீர்ப்பாயம் வெளியிட்ட இடைக்கால உத்தரவில் டெல்லியில் காற்று மாசு அதிகமாக இருப்பதன் காரணமாகவும், கொரோனாவைக் கருத்தில் கொண்டும் டெல்லி பெருநகரம் முழுவதுமாக பட்டாசு விற்க வெடிக்க முழு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு டெல்லியில் பசுமை பட்டாசு வெடிக்க அனுமதித்த நிலையில், இந்த முறை பசுமை பட்டாசுகள் உள்பட எந்த வகை பட்டாசுகளும் வெடிக்க கூடாது என்று இன்றைய புதிய உத்தரவில் கூறப்பட்டிருக்கிறது.
நவம்பர் 9 முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை முழு தடை விதிப்பதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறியிருக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் எந்தெந்த நகரங்களில் காற்று மாசு மோசமாக இருந்ததோ அந்த நகரங்களிலும் பட்டாசுக்கு தடை விதிக்கப்படுள்ளது.
அதே நேரத்தில் காற்று மாசு மிதமாக உள்ள நகரங்களில் ஏற்கனவே அந்த மாநிலங்கள் விதித்துள்ள கட்டுப்பாடுகளை தொடரலாம் என்று கூறப்படுள்ளது. இதுவரை கட்டுப்பாடுகள் விதிக்காத மாநிலங்களில் தீபாவளி பண்டிகையன்று மட்டும் இரவு 8 மணிமுதல் 10 மணிவரை பட்டாசு வெடிக்க அனுமதிக்கலாம்.
அதேபோன்று கிறிஸ்துமஸ் தினத்தன்றும், புத்தாண்டு அன்றும் நள்ளிரவு 11:55 முதல் 12:30 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதிக்கலாம் என்று இன்றைய இடைக்கால உத்தரவில் கூறப்பட்டுள்ளது. வழக்கு மீண்டும் டிசம்பர் ஒன்றாம் தேதி விசாரணைக்கு ப் பட்டியலிடப்பட்டுள்ளது.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!