India
மாட்டிக்கொண்ட பா.ஜ.க அரசு : ‘மாட்டுச்சாண சிப்’ குறித்து கேள்வியெழுப்பி 600 விஞ்ஞானிகள் கடிதம்!
மத்திய அரசின் மீன்வள, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் என்ற அமைப்பு செயல்படுகிறது. பசுக்களைப் பேணுதல், பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் என்று செயல்படுவதுதான் இந்த அமைப்பின் வேலை.
எனவே நாட்டில் பசுக்களை வைத்து அரசியல் செய்யும் இந்த அமைப்பு தீபாவளியை முன்னிட்டு, பசு மாட்டுச் சாணத் தயாரிப்புகளை ஊக்குவிக்கப் போகிறோம் என்று ‘காமதேனு தீபாவளி அபியான்' என்ற நாடு தழுவிய பிரச்சாரத்தைத் தொடங்கி உள்ளது.
சில நாட்களுக்கு முன்பு இதன் தொடக்க விழாவில் மத்திய அரசின் ராஷ்டிரிய காமதேனு ஆயோக் அமைப்பின் தலைவர் வல்லபாய் கதிரியா மாட்டுச் சாணத்தால் செய்யப்பட்ட சிப் என்று ஒன்றை அறிமுகப்படுத்தினார். அந்த சிப் கதிர்வீச்சை கட்டுப்படுத்தும் என்றும் அது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் பேசியிருந்தார்.
இந்நிலையில் மாட்டுச் சாணத்தால் தயாரிக்கப்பட்ட செல்போன் சிப்பில் கதிர்வீச்சைத் தடுக்கும் திறன் உள்ளதாகக் கூறிய காமதேனு ஆயோக் தலைவருக்கு அந்த ஆராய்ச்சி குறித்து, பேராசிரியர்கள், வல்லுநர்கள் உட்பட மொத்தம் 600 பேர் கடிதம் ஒன்றை எழுதி கேள்வி எழுப்பி உள்ளனர்.
அதில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளாவன :
இந்த மாட்டுச்சாணத்தாலான சிப்பை தயாரித்த முதன்மை விஞ்ஞானிகள் யார்?
மாட்டுச்சாண சிப் கதிர்வீச்சு எதிர்ப்புத் திறன் கொண்டது என்பது குறித்து எத்தனை பேரிடம், எங்கு, எப்போது பரிசோதனை நடத்தப்பட்டது?
இந்த சிப் அறிவியல்பூர்வமாக யாரால் நிரூபிக்கப்பட்டது?
இந்த கண்டுபிடிப்புகள் எங்கு வெளியிடப்பட்டன?
தரவு மற்றும் சோதனை விவரங்களை வெளியிட முடியுமா?
உள்ளிட்ட பல கேள்விகளை அடுக்கடுக்காக கேட்டுள்ளனர்.
Also Read
-
தொடர்ந்து 4 நாட்களாக சசிகாந்த் உண்ணாவிரத போராட்டம்.. முதலமைச்சரின் கோரிக்கைக்கு இணங்க போராட்டம் முடிவு!
-
"நயினார் நாகேந்திரன் தேவையில்லாமல் வாயை கொடுத்து மாட்டிக்கொள்கிறார்" - அமைச்சர் TRB ராஜா பதிலடி !
-
கச்சத்தீவு விவகாரம் : “இலங்கை அதிபரின் பேச்சு, இருநாட்டு உறவுக்கு எதிரானது” - CPI முத்தரசன் கண்டனம்!
-
முதலமைச்சரின் ஜெர்மனி பயணம் மூலம் ரூ.7020 கோடி முதலீடு... 15,320 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி !
-
மூப்பனாரை பிரதமராக்க முயன்றவர் கலைஞர்.... திடீரென்று தமிழ் வேடம் போட்ட நிர்மலா - முரசொலி விமர்சனம் !