India
பிளாட்பாரத்தில் பெற்றோருடன் உறங்கிய 4 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை: கர்நாடகாவில் நடந்த கொடூரம்!
தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் பொம்பை வியாபரத்திற்காக தன் மனைவி மற்றும் 4 வயது குழந்தையுடன் கர்நாடகா சென்றுள்ளார். அங்கு கர்நாடக மாநிலம் ஸ்ரீராமபுரா பகுதியில் சிறிய கூடாரம் அமைத்து தங்கி பொம்பை வியாபாரம் செய்துவந்துள்ளார்.
இந்நிலையில் கர்நாடகாவில் கடந்த வாரம் பொய்த கனமழையால், அந்த நபரின் கூடாரம் நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனையடுத்து. அவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சங்கோலி ராயண்ணா நிலையத்தின் புன்புறமுள்ள நடைமேடையில் தஞ்சமடைந்தார்.
இதனிடையே, கடந்த வாரம் வேலையை முடித்துவிட்டு நடைமேடையில் தூங்கிக்கொண்டிருக்கும் போது, நள்ளிரவில் மர்ம நபர் ஒருவன் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.
சிறிது நேரத்தில் குழந்தையின் அலரல் சத்தம் கேட்டு அந்த நபர் குழந்தையை பெற்றோர் தேட ஆரம்பித்துள்ளனர். அப்போது, மற்றொரு நடைமேடையில் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நிலையில் இருந்துள்ளது. இதனையடுத்து பெற்றோர் குழந்தையை மீட்டு, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
பின்னர் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலிஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, குற்றவாளியை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, குற்றவாளி அதே பகுதியில் வசிக்கும், சென்னையைச் சேர்ந்த தினேஷ் என்பதும் அருகில் உள்ள இடத்தில் மறைந்து இருப்பதாகவும் போலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, திங்கட்கிழமை அதிகாலை போலிஸார் தினேஷைப் பிடிக்கச் சென்றபோது, உதவி ஆய்வாளரை கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்றுள்ளான். இதனையடுத்து அவன் காலில் துப்பாக்கியால் சுட்டு போலிஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
162 அடுக்குமாடி குடியிருப்பு முதல் பெண்களுக்கான Gym வரை... கொளத்தூரில் இடைவிடாது சுற்றி சுழன்ற முதல்வர்!
-
கொளத்தூரில் முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கம் : 2 இறகுப்பந்து ஆடுகளங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் என்ன?
-
விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு 3% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு வேலைவாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?
-
2,429 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நாளை விரிவாக்கம் : 3.6 லட்சம் மாணவர்கள் பயன்!
-
முதலமைச்சரின் உதவி மையம் : திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!