India
கொரோனாவுக்கு எதிராக போராடுவதுதான் தர்மயுத்தம்... பண்டிகைகளை கொண்டாட வேண்டாம்... ஹர்ஷ்வர்தன் எச்சரிக்கை!
குளிர்காலத்தில் நுரையீரல் சம்பந்தப்பட்ட சுவாச நோய் கிருமிகளின் தாக்கம் பொதுவாக அதிகமாக இருக்கும். எனவே, அந்த நேரத்தில் கொரோனா பரவுவது அதிகரிக்க வாய்புள்ளது. எனவே தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
மாஸ்க் அணியாமல் எந்த கொண்டாட்டங்களிலும் ஈடுபடக்கூடாது என்று நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்தார். டெல்லி, கேரளா, பஞ்சாப் மாநிலங்களில் இரண்டாம் கட்ட பரவல் ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.
அதேபோல, டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் அடுத்த மாதம் தொடங்கும் குளிர்காலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்று தேசிய நோய்கட்டுப்பாட்டு மையம் கூறியுள்ளது. குளிர்காலத்தில் சுவாச உறுப்புகள் சம்பந்தப்பட்ட நோய்கள் அதிகரிக்கும் என்பதால் அதோடு சேர்த்து கொரோனா தொற்றும் அதிகரிக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
குளிர்காலத்தில் நாளொன்றுக்கு சராசரியாக டெல்லியில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிக்கலாம். அதனை சமாளிக்க தாயாராகும்படி டெல்லி அரசுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஹரியானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கொரோனா வைரஸின் வீரியம் குளிர்காலத்தில் இரட்டிப்பாகும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனாவுக்கு எதிராக போராடுவதுதான் தர்மயுத்தமாக இருக்க வேண்டும்.
ஆகவே உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் எதிர்வரும் பண்டிகை காலங்களை கொண்டாட வேண்டாம் என கூறியுள்ளார். எந்த மதமும், எந்த கடவுளும் ஆடம்பரமான முறையில்தான் பண்டிகைகளை கொண்டாட வேண்டும் என்றோ, கோவில்களுக்குச் சென்றுதான் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கூறவில்லை என தெரிவித்துள்ளார்.
அடுத்த 2 மாதங்களுக்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பின்பற்றாவிட்டால் நிலைமை தலைகீழாக மாறிவிடும் எனவும் ஹர்ஷ் வர்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Also Read
-
மூத்த பத்திரிக்கையாளர்களுக்கு சம்மன்... எதிர்ப்பாளர்களை மிரட்டும் பாஜக அரசு - நடந்தது என்ன ?
-
ஒரே நாளில் பயிர் கடன்கள்... “எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு திட்டம் இல்லை” - முரசொலி புகழாரம்!
-
“பட்டியலின மக்களுக்கான நிதியை பயன்படுத்தாதது ஏன்?” : மக்களவையில் ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“மாம்பழ கூழுக்கு 12% ஜிஎஸ்டி வரி என்பது அநியாயம்!” : திமுக எம்.பி. பி.வில்சன் குற்றச்சாட்டு!
-
சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் இடையேயான மெட்ரோ ரயில்! : தமிழ்நாடு அரசிடம் திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு!