India
ஹாத்ரஸ்: மிகவும் கொடுமையாது, அதிர்ச்சியளிக்கிறது.. விரிவாக பதிலளிக்க யோகி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் ஆணை!
ஹாத்ரஸ் சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் மேற்பார்வையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் உட்பட மூவர் தொடர்ந்த பொதுநல வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பாப்டே அமர்வில் விசாரணைக்கு வந்தது. உத்தர பிரதேச அரசு சார்பில் ஆஜரான மத்திய அரசின் சோலிசிட்டர் ஜெனரல், நீதிமன்ற மேற்பார்வையில் சி.பி.ஐ விசாராணை நடத்த எதிர்ப்பு இல்லை என்று தெரிவித்தார்.
மனு தாரர்கள் தரப்பு வழக்கறிஞர் இந்திரா ஜெயசிங், நேர்மையான விசாரணை நடைபெற வேண்டுமானால் முதலில் கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். உன்னாவ் வழக்கு போன்று இதனையும் டெல்லிக்கு மாற்ற வேண்டும். சி.பி.ஐ மீது குடும்பத்தினருக்கு நம்பிக்கை இல்லை என்பதால் நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உத்தரவிடவேண்டும் என்று வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே இந்த சம்பவம் மிகவும் கொடுமையானது. அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. சிறந்த வழக்கறிஞரை நியமிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும் வழக்கின் சாட்சிகளுக்கும் இதுவரை என்ன பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என கருத்து தெரிவித்து கேள்வி எழுப்பினார்.
மேலும், பெண்ணின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்குவது, அந்த குடும்பத்தினருக்கு வாதிட வழக்கறிஞர் உள்ளாரா? அலகாபாத் உயர்நீதிமன்ற மேற்பார்வைக்கு வழக்கை மாற்றுவதா? ஆகிய அம்சங்களில் பதிலளிக்க உத்தர பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் நாளைக்குள் பதிலளிக்கும் படி உத்தரவிட்டு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தது.
Also Read
-
”இடஒதுக்கீடு கொள்கையின் பிதாமகன் தமிழ்நாடு” : சட்டப்பேரவையில் அமைச்சர் கோவி.செழியன் பேச்சு!
-
”இன்ஸ்டா ரீல்ஸ் அரசியல் செய்யும் பழனிசாமி” : பழனிசாமிக்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி!
-
தமிழ்நாட்டை தண்டிப்பது ஏன்? : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு 10 கேள்விகளை எழுப்பிய அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
BLINKIT வணிக தளத்தில் ‘கூட்டுறவு நிறுவனங்களின் தயாரிப்புகள்!’ : முழு விவரம் உள்ளே!
-
இரட்டை இலக்கை எட்டிய தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமை!