India
கொரோனா அச்சம்: மழைக்காலக் கூட்டத்தொடரை முன் கூட்டியே முடிக்க வார விடுமுறையிலும் கூடும் நாடாளுமன்றம் !
நாடாளுமன்றம் கடந்த 14 ஆம் தேதி கூடிய போது 72 மணி நேரத்துக்குள் கொரோனா சோதனை செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதில் 30 எம்.பி.களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
அதன் பின்னர் இரண்டொரு நாட்களில் மத்திய அமைச்சர்கள் நிதின்கட்கரி, பிரகலாத் பாட்டேல் மற்றும் சில எம்.பிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 32 எம்.பிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற ஊழியர்கள் பலருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது எம்.பி.,களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரை முன்கூட்டியே ஒத்திவைக்க வேண்டும் என்று பல கட்சிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் கொண்டுவரப்பட்ட 11 அவசர சட்டங்களுக்கான மாற்று மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட உடன் நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பது குறித்து பரிசீலிப்பதாக அரசு தரப்பிலும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. எனவே, அக்டோபர் 1 ஆம் தேதி வரைத் திட்டமிடப்பட்டுள்ள மழைக்காலக் கூட்டத் தொடர் 25 ஆம் தேதிக்கு முன்னதாகவே ஒத்திவைக்க வாய்ப்புள்ளது.
கொரொனா காரணமாக எம்.பிக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வர இயலாது என்பதால் வார விடுமுறை நாட்களான இன்றும் நாளையும் நாடாளுமன்றம் நடைபெறுகிறது. பட்ஜெட் தாக்கல் செய்ய சனிக்கிழமை நாடாளுமன்றம் கூடியிருக்கிறது. ஆனால், வழக்கமான அலுவல்களுக்கான சனி, ஞாயிறு தினங்களில் நாடாளுமன்றம் கூடுவது இது முதல் முறையாகும்.
Also Read
-
“S.I.R-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்கு தாக்கல் செய்யும்!: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!
-
SIR விவகாரம் : முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்... 40 கட்சிகள் பங்கேற்பு! - விவரம்!
-
ஒக்கியம் மடுவு கால்வாயில் ரூ.27 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு!
-
சென்னையில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தெருநாய்களுக்கு தடுப்பூசி... மாநகராட்சி தகவல் !