India
“கொரோனாவை ஒழிக்கிறோம் எனக்கூறி இந்தியாவை படுகுழியில் தள்ளிய பா.ஜ.க அரசு” - ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக திட்டமிட்டு செயல்படுகிறோம் எனக் கூறி கொண்டு இந்தியாவை மத்திய பா.ஜ.க. அரசு படுகுழியில் தள்ளிவிட்டுள்ளது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மத்திய மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கைகள், திட்டமிடல்கள், செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து விமர்சித்து வருவதோடு, பாஜக அரசால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்தும் வெளிப்படுத்தி வருகிறார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி.
அவ்வகையில், இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கொரோனாவுக்கு எதிரான மத்திய பா.ஜ.க., அரசின் மோசமான செயல்பாடுகளால் மொத்த உள்நாட்டு உற்பத்தி 24 சதவிகிதமாக குறைந்துவிட்டதாக சாடியுள்ளார்.
12 கோடி வேலைவாய்ப்புகள் பறிபோயுள்ளதாக தெரிவித்துள்ள அவர், பதினைந்தரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கூடுதல் கடன்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். உலகளவில் இந்தியாவில் நாள்தோறும் கொரோனா பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசும், ஊடகங்களும் இதனை மறைத்து வருகிறது என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
“3 ஃபைல் இருக்குனா வெளியிட வேண்டியதுதானா.. கேள்விக்கு பதிலளிக்க திராணி இல்லை” - செந்தில் பாலாஜி காட்டம்!
-
இடதுசாரிகளா? அதிகாரிகளா? யார் வேண்டும் : முதலமைச்சர் விஜய்க்கு கேள்வி எழுப்பிய பெ.சண்முகம்!
-
‘மகளைக் காதலித்ததால் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்.. கூலிப்படையை ஏவி தவெக நிர்வாகியின் வெறிச்செயல்’
-
நெஞ்சத்தைக் கனக்கச் செய்கின்றன : உதவியாளராகப் பணியாற்றிய ஹரிகிருஷ்ணன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
“Comeback கொடுப்பதில் நாம் Specialist.. புதுமுகங்களுக்கு பொறுப்பு” : செயற்குழுவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!