India
மீண்டும் வருகிறதா பப்ஜி? தடைக்கு பின் பப்ஜி நிர்வாகம் விளக்கம்
பப்ஜி கேமிங் செயலியை இந்திய அரசு தடை செய்ததைத் தொடர்ந்து அந்த நிறுவனம் சில விளக்கங்களை அளித்துள்ளது. அதில் பப்ஜி இந்தியாவுக்கு மீண்டும் வரும் என சூசகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா சீனா இடையேயான எல்லை பிரச்சினை காரணமாக லடாக்கில் பதற்றம் தொடர்ந்து நிலவி வருகிறது. இரு நாட்டு இராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் இந்திய இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். அதே நேரத்தில் சீனாவின் தரப்பிலும் வீரர்கள் பலியாகினர்.
இந்நிலையில் சீனாவுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக பப்ஜி உள்ளிட்ட 117 சீன மொபைல் செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது. அதன் படி இந்தியாவில் பல கோடி பேரால் விளையாடப்பட்டு வந்த பப்ஜி என்ற கேமிங் செயலியும் அவற்றோடு சேர்த்து தடை செய்யப்பட்டது.
பல கோடி வாடிக்கையாளர்களை வைத்திருந்த பப்ஜி நிறுவனத்துக்கு அது மிகப் பெரிய அடியாக இருந்தது. இந்நிலையில் டான்செட் என்ற சீன நிறுவனத்திடமிருந்து பப்ஜி கேமிங் ஆப்பின் விநியோக உரிமை பறிக்கப்படும் என்றும், இந்தியாவுக்கான புதிய பப்ஜி உருவாக்கப்படும் எனவும் பப்ஜி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பப்ஜி மொபைல் நிறுவனம் அடிப்படையில் ஒரு தென் கொரிய நிறுவனம். அதைச் சீன நிறுவனமான டான்செட் இந்தியாவில் விநியோகித்து வந்தது. அதனால்தான் அது தடை செய்யப்பட்டுள்ளது.
”சமீபத்தில் நடந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து, பப்ஜி கார்ப்பிரேஷன் டான்செட் கேம்ஸ் நிறுவனத்துக்கு இனி பப்ஜி மொபைலின் விநியோகிக்கும் உரிமையைத் தடை செய்ய முடிவெடுத்துள்ளது. இனிவரும் காலங்களில் பப்ஜி கார்ப்பிரேஷனே நாட்டுக்குள்ளாக உள்ள அனைத்து விநியோக பொறுப்புகளையும் நேரடியாக எடுத்துக்கொள்ளும். இந்தியாவுக்கான சொந்த பப்ஜி அனுபவங்களைத் தர எங்கள் நிறுவனம் வழிகளைக் கண்டறிந்துவருகிறது.” என பப்ஜி கார்ப்பிரேஷன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
"தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு !
-
"தனி மனிதரை விட தத்துவங்கள்தான் அரசியலை வழிநடத்தும்" - சுதர்சன் ரெட்டிக்கு முதலமைச்சர் ஆதரவு !
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !