India
“உலகளவில் கொரோனா பாதிப்பில் 2வது இடத்தில் இந்தியா” : 2வது நாளாக 90 ஆயிரம் பேர் பாதிப்பு; 1,061 பேர் பலி!
கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.
கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன. இன்னும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஊரடங்கு தொடர்கிறது.
உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 27,292,583 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 887,554 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். அதேப்போல், உலக நாடுகளில் அதிகட்சமாக அமெரிக்காவில் மட்டும் 6,431,152 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 192,818 பேர் பலியாகினர்.
இந்நிலையில், இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 24 மணி நேரத்தில் 90,802 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார், 1061 பேர் பலியாகியுள்ளனர். இதனால், உலகளவில் கொரோனா பாதிப்பில் 3வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது பிரேசிலை முந்திக்கொண்டு 2வது இடத்தை பிடித்திருக்கிறது.
இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 42 லட்சத்தை தாண்டியுள்ளது. பலி 70 ஆயிரத்தை தாண்டியது. இதுவரை இந்தியாவில் 42,04,613 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலியானோர் எண்ணிக்கை 70,679 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய கணக்குப்படி, கடந்த நான்கு நாட்களாக உயிரிழப்பு ஆயிரத்துக்கு மேல் உள்ளது. உயிரிழப்பு 1.70% ஆக அதிகரித்துள்ளது. அதேவேளையில், கடந்த இரண்டு வாரங்களில் 10 லட்சம் பேருக்குப் பாதிப்க்கப்பட்டுள்ளனர். அதே கடந்த ஒரு மாதத்தில் மட்டுமே 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 77.31% பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.
Also Read
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி கேள்வி!
-
ரேபிஸ் மரணங்களுக்கு தீர்வு என்ன? : மக்களவையில் ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பிய ஆ.ராசா MP!
-
“கர்நாடக அரசின் முயற்சியை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது” : அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்!