Nikkei Asian Review
India

3 லட்சம் டிஸ்லைக் : கேலிக்குள்ளாகும் மோடியின் ‘மான் கி பாத்’ - ட்ரெண்டாகும் #StudentsDislikePMModi

பிரதமர் மோடியின் ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியை யூ-ட்யூபில் 9 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்த நிலையில், அதனை வெறும் 23 ஆயிரம் பேர் மட்டுமே லைக் செய்திருக்கிறார்கள். அதேநேரத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மோடியின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சிக்கு டிஸ்லைக் செய்திருக்கிறார்கள். இது சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று ‘மான் கி பாத்’ என்ற மனதின் குரல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரதமர் மோடி வானொலியில் உரையாற்றுவது வழக்கம். பல்வேறு நிகழ்வுகள் குறித்து இந்நிகழ்ச்சியில் அவர் பேசி வருகிறார்.

அந்தவகையில் ஆகஸ்ட் மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்றும் பிரதமர் மோடி, வானொலியில் உரையாற்றினார். இந்நிலையில், அவரது இந்த நிகழ்ச்சியை யூ-ட்யூபில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்த நிலையில், வெறும் 36 ஆயிரம் பேர் மட்டும் பிடித்திருக்கிறது எனப் பதிவிட்டுள்ளனர்.

இருப்பினும் சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பிரதமரின் நேற்றைய ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியை பிடிக்கவில்லை என டிஸ்லைக் செய்திருக்கிறார்கள்.

ஏனெனில், நாட்டின் பிரதமராக பொறுப்பேற்று 6 ஆண்டை கடந்திருக்கிறார் நரேந்திர மோடி. ஆனால், இதுகாறும் ஒரு முறையேனும் நாட்டு மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் எவ்வித ஆக்கப்பூர்வமான செய்தியாளர்கள் சந்திப்பிலும் பிரதமர் மோடி பங்கேற்றதில்லை.

நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போதும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பிரதமர் என்ற முறையில் எந்த பதிலையும் அளித்ததில்லை. இதனால் பெரும் அதிருப்திக்கு ஆளான மக்கள் நேற்றைய ‘மான் கி பாத்’ நிகழ்ச்சிக்கு டிஸ்லைக்குகளை கொட்டிக் குவித்திருக்கிறார்கள்.

மேலும், ட்விட்டரில் #StudentsDislikePMModi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இது பா.ஜ.க. தரப்பினரிடையே பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ஒருபுறம் ஊரடங்கு தளர்வு; மறுபுறம் பெட்ரோல் டீசல் விலை உயர்வு: பேரிடரிலும் கல்லா கட்ட துடிக்கும் மோடி அரசு