India
செப். 7 முதல் மெட்ரோ சேவைக்கு அனுமதி : மத்திய அரசை ஆலோசிக்காமல் மாநில அரசுகள் ஊரடங்கு அறிவிக்க தடை!
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா பரவல் கட்டுக்குள் வராத நிலையிலும் மக்களின் வாழ்வாதாரம் கருதி கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, தற்போது அமலில் உள்ள மூன்றாம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதியோடு முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் ஊரடங்கின் நான்காம் கட்ட தளர்வுகள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி,கட்டுப்பாட்டு பகுதிகளில் மட்டும் செப்டம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
செப்டம்பர் 30 வரை கல்வி, நிறுவனங்கள் செயல்படாது. பள்ளி, கல்லுாரிகள் செயல்பட தடை தொடரும்.
செப்டம்பர் 7 முதல் மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 21 முதல் பொழுதுபோக்கு, திறந்தவெளி திரையரங்குகள், விளையாட்டு அரங்கங்களில் 100 பேர் வரை கூடலாம்.
திரையரங்குகள், பொழுது போக்கு பூங்காக்கள் செப்டம்பர் 30 வரை மூடப்பட்டிருக்கும்.
மாநிலங்களுக்குள் செல்லும் மக்களுக்கு இ-பாஸ் தேவையில்லை.
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாட்டு விமான சேவைகளுக்கு மட்டும் அனுமதி.
வெளிநாட்டு விமான சேவைகளுக்கு தடை நீடிக்கிறது.
மத்திய அரசிடம் கலந்தாலோசிக்காமல் மாநில அரசு ஊரடங்கை அமல்படுத்தக் கூடாது.
ஆகிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!