Corona Virus

தமிழகத்தில் மீண்டும் 6 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று... மொத்த பாதிப்பு 4,15,590 ஆக உயர்வு! #Covid19

தமிழகத்தில் இன்று 6,352 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகத்தில் இன்று 6,352 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,15,590 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 80,988 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தமாக 46 லட்சத்து 54 ஆயிரத்து 797 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,285 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதன் மூலம் சென்னையில் மட்டும் இதுவரை 1,33,173 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையை தவிர்த்து, கோவையில் 491 பேருக்கும், சேலத்தில் 432 பேருக்கும், கடலூரில் 420 பேருக்கும், செங்கல்பட்டில் 306 பேருக்கும், திருவள்ளூரில் 284 பேருக்கும் இன்று கொரோனா உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் 6 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று... மொத்த பாதிப்பு 4,15,590 ஆக உயர்வு! #Covid19

கொரோனா பாதிக்கப்பட்டிருந்தவர்களில் இன்று மட்டும் 6,045 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 55 ஆயிரத்து 727 ஆக உள்ளது. தற்போதைய நிலையில் 52,726 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று மட்டும் கொரோனா பாதித்த 87 பேர் உயிரிழந்தனர். அதில், 28 பேர் தனியார் மருத்துவமனையிலும், 59 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 7,137 ஆக அதிகரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories