India
“கொரோனா மருந்துக்கான அறிகுறியே இல்லை - மோடி அரசின் தயாரின்மையே காரணம்” : ராகுல் காந்தி சாடல்!
கொரோனா வைரஸ் தொற்று பல மாதங்களாகத் தேசமெங்கும் வரலாறு காணாத சேதாரத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை கொரோனாவால் 33 லட்சம் பாதிக்கப்பட்டிருக்கும் இச்சூழலில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு மற்றும் ஆய்வு என்பது இன்றியமையாததாக உள்ளது.
இந்த கொரோனா தொற்றை மத்திய அரசு எதிர்கொள்ளும் விதத்தில் அதனுடைய தயாரின்மை வெளிப்படுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். சர்வதேச அளவில் அமெரிக்கா மற்றும் பிரேசில் நாட்டுக்கு அடுத்தாக இந்தியா மிக மோசமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது அதே விஷயத்தைக் குறிப்பிட்டு, “ஒரு நியாயமான, அனைவருக்குமான கோவிட் தடுப்பு மருந்து வியூகம் இந்நேரம் உருவாகியிருக்கவேண்டும். ஆனால் அதற்கான அறிகுறியே இல்லை. இந்திய அரசின் தயாரிப்பின்மையை அச்சமூட்டுவதாக உள்ளது” என தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜூலை 17-ம் தேதி இந்தியாவில் 10 லட்சம் கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டபோது ராகுல் காந்தி ஆகஸ்ட் மாதம் இந்தியா மற்றொரு 10 லட்சத்தையும் கடக்கும் என எச்சரித்தார். அது இப்போது நிகழ்ந்துள்ளது. கொரோனா தொற்று ஏற்படத்தொடங்கிய காலகட்டத்திலிருந்து ராகுல் காந்தி பல முக்கிய விஷயங்களைத் தொடர்ந்து பேசிவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மாபெரும் சாதனைகள்... பட்டியலை வெளியிட்டு தமிழ்நாடு அரசு பெருமிதம்!
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!