India
2 கோடி பேரின் வாழ்வை இருள் மயமாக்கிவிட்டு ஃபேஸ்புக்கில் வெறுப்பை உமிழும் பாஜக அரசு - ராகுல்காந்தி காட்டம்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 26 சதவிகிதம் வரை சரியும் என பொருளாதார ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேலும் கடந்த 9 வாரங்களில் புதிய உச்சமாக வேலையில்லா திண்டாட்டம் 9.6 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் அதிர்ச்சி நிறைந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில், கடந்த 4 மாதங்களில் அதாவது ஏப்ரல் - ஜூலை வரையில் இந்தியாவில் மாதச் சம்பளத்துக்கு பணிபுரியும் ஒரு கோடியே 89 லட்சம் பேருக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏப்ரலில் ஒரு கோடியே 77 லட்சத்தினரும், மே மாதத்தில் ஒரு லட்சம் பேரும், ஜூலை 39 லட்சம் பேரும், ஜூலையில் 50 லட்சம் பேரும் வேலையிழந்திருக்கிறார்கள்.
இதுமட்டுமல்லாது தினக் கூலித் தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் என 9 கோடி பேரின் வேலையும் இந்த ஊரடங்கு நேரத்தில் பறிபோயுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ட்விட்டரில் மோடி அரசை சாடி ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். அதில், கடந்த 4 மாதங்களில் 2 கோடி பேரின் வேலை வாய்ப்புகளும் 2 கோடி குடும்பங்களின் எதிர்காலம் இருளில் மூழ்கியுள்ளது.
ஃபேஸ்புக்கில் தவறான செய்திகள் மூலம் வெறுப்பை பரப்பி உண்மையை மறைத்திட முடியாது என பாஜக அரசை விமர்சித்துள்ளார்.
Also Read
-
“தமிழ் மீனவர்களை கைவிடும் ஒன்றிய அரசு!” : நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி.க்கள் கண்டனம்!
-
திருவண்ணாமலையில் 33 ஏக்கர் பரப்பளவில் ‘மு.க.ஸ்டாலின் பூங்கா’ திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
”திருப்பரங்குன்றத்தை இன்னொரு அயோத்தியாக மாற்ற பார்க்கிறது பா.ஜ.க” : கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு!
-
“தமிழ்நாடுதான் Electronics துறையின் Capital” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மதுரை மீது பா.ஜ.க.வுக்கு ஏன் இத்தனை வன்மம்? : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சரமாரி கேள்வி!