India

“கொரோனா பாதிப்பு 27 லட்சத்தை தாண்டியது; பலி 52,889 ஆக உயர்வு” : மோடி அரசின் தடுப்பு நடவடிக்கை என்ன ஆனது?

கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.

உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 22,307,187 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 784,353 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். அதிகட்சமாக அமெரிக்காவில் மட்டும் 5,655,974 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 175,074 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா ப்பு 27.67 லட்சத்தை தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் 64,531பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,092 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 52,889 ஆக அதிகரித்துள்ளது.

அதேப்போல், நாடுமுழுவதும் தற்போது பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27,67,273 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 20.37 லட்சமாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கடந்த ஒரு மாதமாகத்தான் கொரோனா சோதனைகள் அனைத்து மாநிலங்களிலும் அதிக அளவில் நடத்தப்படுகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு ஐந்து லட்சத்துக்கு மேல் சோதனைகள் நடத்தப்பட்டுவருகிறது.

நாடுமுழுதும் இதுவரை 3.17 கோடி கோடி பேருக்கு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 8.01 லட்சம் பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளதாக ஐ.சி எம்.ஆர் தெரிவித்துள்ளது.

Also Read: NEP2020-ஐ அமல்படுத்த தீவிரம்: மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயரை கல்வி அமைச்சகமாக மாற்றியது மோடி அரசு!