India
வங்கிக் கடன் தவணைக்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு - ஐகோர்ட்டில் ரிசர்வ் வங்கி தகவல்!
கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு காரணமாக கடன் தவணை மற்றும் வட்டியை செலுத்த இந்திய ரிசர்வ் வங்கி 6 மாத கால அவகாசம் வழங்கியுள்ளது. ஆனால் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் கொடுத்த சிறு கடன் நிறுவனங்கள் கடன் தொகையை திருப்பிச் செலுத்த வேண்டுமென கட்டாயப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளரான சுகந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். ரிசர்வ் வங்கி உத்தரவிற்கு முரணாக கடனை வசூலிக்கும் சிறு கடன் நிறுவனங்களுக்கு எதிராக மகளிர் சுய உதவி குழுக்கள் அளிக்கும் புகார்களை பெற மாவட்ட வாரியாக தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.
கடன் தொகை மற்றும் வட்டியை செலுத்துவதற்கான காலக்கெடுவை செப்டம்பர் முதல் 2021 பிப்ரவரி வரை நீட்டிக்க வேண்டுமென தமிழக அரசுக்கும், ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குனருக்கும் உத்தரவிட வேண்டுமென கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், நீதிபதி ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ரிசர்வ் வங்கி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வங்கிகள் மீதான புகார்களை விசாரிக்க ஏற்கனவே மாவட்டம்தோறும் ஆம்புட்ஸ்மேன் என்ற அதிகாரிகள் உள்ளதாக குறிப்பிட்டார்.
கடன் தவணை மற்றும் வட்டி செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பது அரசினுடைய கொள்கை முடிவு என்றும் அதேவேளையில் மேலும் காலஅவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பு (moratorium) உள்ளதாகவும் அது தொடர்பான குழு ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பிட்டார். இதையடுத்து நீதிபதிகள் வழக்கு விசாரணையை செப்டம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!