India
“கொரோனாவில் இருந்து எப்போது விடுதலை?”: இந்தியாவில் பாதிப்பு 25 லட்சத்தை தாண்டியது - பலி 49,036 ஆக உயர்வு!
கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.
உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 21,354,689 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 763,353 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர். அதிகட்சமாக அமெரிக்காவில் மட்டும் 5,476,266 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 171,535 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 25 லட்சத்தை தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் 65,002 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 996 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 49,036 ஆக அதிகரித்துள்ளது.
அதேப்போல், நாடுமுழுவதும் தற்போது பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,26,192 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 18,08,936 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கடந்த ஒரு மாதமாகத்தான் கொரோனா சோதனைகள் அனைத்து மாநிலங்களிலும் அதிக அளவில் நடத்தப்படுகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு ஐந்து லட்சத்துக்கு மேல் சோதனைகள் நடத்தப்பட்டுவருகிறது.
இதனிடையே கொரோனா சோதனை 3 லட்சத்தை நெருங்கியுள்ளது. நாடுமுழுதும் இதுவரை 2,85,63,095 கோடி பேருக்கு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 8,68,679 லட்சம் பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளதாக ஐ.சி எம்.ஆர் தெரிவித்துள்ளது.
Also Read
-
முகத்தை மறைத்துக் கொண்டு வெளியேறுவது ஏன்? : பழனிசாமிக்கு தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி!
-
“இதுக்கெல்லாம் துடிக்காத நெஞ்சம் முகமூடி வீடியோவை வெளியிட்டதால துடிக்குதோ” -அதிமுகவுக்கு குவியும் கண்டனம்
-
61 வயது மூதாட்டியிடம் 3 சவரன் தங்கநகை வழிப்பறி.. தவெக பிரமுகர் கைது.. விசாரணையில் ஷாக்!
-
”வாக்கு திருடர்களை தலைமைத் தேர்தல் ஆணையர் பாதுகாக்கிறார்” : மீண்டும் ராகுல் காந்தி MP குற்றச்சாட்டு!
-
முகத்தை மறைத்து சென்ற பழனிசாமி: பத்திரிகையாளருக்கு நோட்டீஸ் அனுப்பிய அதிமுக.. Chennai Press Club கண்டனம்!