India
ஒரு வாரத்திற்கான வானிலை முன்னறிவிப்பை அறிந்துகொள்ள உதவும் ‘Mausam’ ஆப் - அறிமுகம் செய்தது மத்திய அரசு!
வானிலை தகவல்களை உடனுக்குடன் வழங்க மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகம் மவுசம் (Mausam) எனும் செயலியை அறிமுகம் செய்துள்ளது.
இந்த மவுசம் செயலி 200 நகரங்களுக்கான காலநிலை மாற்றம், தட்பவெப்ப நிலை, காற்றின் ஈரத்தன்மை, காற்றின் வேகம் மற்றும் திசை உள்ளிட்ட விவரங்களைப் பயனாளர்களுக்குத் தரும்.
இந்த செயலியை வெப்ப மண்டல பயிர் ஆராய்ச்சிக்கான சர்வதேச அமைப்பும், இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டிராப்பிக்கல் மெட்ராலஜி என்ற அமைப்பும், இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து தயாரித்துள்ளன.
இந்த மவுசம் செயலி கூகுள் பிளே மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் உள்ளிட்ட இரண்டிலும் கிடைக்கிறது. மேலும் இந்த செயலி பல வசதிகளையும் தருகிறது.
இந்த வானிலை செயலி 200 நகரங்களுக்கான காலநிலை மாற்றம், தட்பவெப்ப நிலை, காற்றின் ஈரத்தன்மை, காற்றின் வேகம் மற்றும் திசை உள்ளிட்ட விவரங்களைப் பயனாளர்களுக்குத் தரும்.
மேலும் இந்த செயலி 800 நிலையங்கள் மற்றும் மாவட்டங்களுக்கான காலநிலை நிலவரத்தையும் வழங்கும். மிகத் தீவிரமான வானிலை இருந்தால் அதற்கான எச்சரிக்கையையும் இந்த மவுசம் ஆப் வழங்கும்.
அதேபோல் 200 நகரங்களுக்கு வெப்பநிலை, ஈரப்பதம், காற்றின் வேகம் மற்றும் திசை உள்ளிட்ட தற்போதைய வானிலை தகவல்கள் ஒரு நாளைக்கு எட்டு முறை புதுப்பிக்கப்படும்.
மேலும், ஆபத்தான வானிலை நிலவும் காலங்களில் சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு ஆகிய வண்ணங்களில் எச்சரிக்கை தகவல்களையும் இந்த மவுசம் செயலி (MAUSAM APP) வழங்கும்.
Also Read
-
”இது நம்ம ஆட்டம் 2026”- மாநில அளவில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கிய துணை முலமைச்சர் உதயநிதி
-
உலகளவில் முதன்முறையாக.. மெட்ரோ சுரங்கப்பாதைக்கு மேல் கட்டப்பட்டு மேம்பாலம்! - அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு!
-
சமூக நீதிக்கான சரித்திர நாயகர் : இந்திய அளவில் ஆதிதிராவிட பழங்குடியின மக்கள் முன்னேற்றம்!
-
என்ன சாதித்தார் காப்பி அடிக்க...? : எந்தக் கூச்சமும் இல்லாமல் சுற்றிக் கொண்டிருப்பவர்தான் பழனிசாமி!
-
46 முதலீட்டுத் திட்டங்களுக்கு ஊக்கச்சலுகைகள்... அமைச்சரவை கூட்டத்தில் நடந்தது என்ன?