India

“வங்கிகளின் வாராக்கடன் அளவு 20 லட்சம் கோடியாக அதிகரிக்கும்” : சமாளிக்க மோடி அரசிடம் திட்டம் இருக்கிறதா?

இந்தியாவில் ஏற்படிருக்கும் கொரோனா பாதிப்பை விட, இந்திய பொருளாதாரம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. முன்னதாகவே கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்த இந்தியா கொரோனா ஊரடங்கால் மேலும் பலத்த அடிவாங்கியுள்ளது.

குறிப்பாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வரையில் இந்திய வர்த்தகச் சந்தைகள் மீண்டுவர வாய்ப்பில் இல்லை என பொருளாதார வல்லுநர்கள் கூறிவருகின்றனர்.

இந்தியாவின் தென் பகுதியில் பொருளாதார வர்த்த நகரமாக இருக்கும் சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய மூன்று நகரங்களிலும் கொரோனா ஊரடங்கள் வர்த்தகச் சந்தை மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது. இதே நிலைதான் நாடுமுழுவதும் உள்ள அனைத்து நகரங்களில் நீடிக்கிறது.

இந்த பாதிப்பின் காரணமாக இந்திய வங்கிகளில் வாராக்கடன் உயர்ந்து, வங்கியின் மூலதனம் காலியாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனை கடந்தவாரம் செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திதாஸ் காந்தியும் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதன் அடிப்பையில் பார்த்தால், பொருளாதார மந்த நிலையில் இருந்து தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் வர்த்தகத்தில் மீண்டுவர மறு முலதனம் தேவைப்படும் எனத் தெரிகிறது. அதாவது, கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பால் இந்தியாவில் வாராக்கடன் அளவு உயர்ந்துள்ளது.

குறிப்பாக, இந்தியாவில் தற்போது மொத்தம் 12 லட்சம் கோடி கடன் நிலுவையில் இருக்கும் போது, சலுகை அறிவிக்கப்பட்ட 31ம் தேதிக்குப் பிறகும், 5ல் 1 பங்கு கடன் திரும்ப வரமுடியாமல் போனால் இந்திய வங்கிகளின் வாராக்கடன் அளவு சுமார் 20 லட்ச கோடி அளவிற்கு உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த 20 லட்சம் கோடி என்பது தற்போதைய அளவைவிட 2 மடங்கு அதிகம் என கூறப்படுகிறது.

ஆகஸ்ட் மாதத்தில் முடியும் சலுகைக்கு பிறகு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை இந்தியா சந்தித்தால் அதனை சமாளிக்க மத்திய அரசின் என்ன திட்டம் உள்ளது என பொருளாதார வல்லுநர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Also Read: “பொருளாதார வீழ்ச்சி; இந்தியாவின் கடன் மொத்த GDPயில் 87.6% வரை அதிகரிக்கும்”: பொருளாதார வல்லுநர் அறிக்கை!