India
“இன்னும் 7 ஆண்டுகளில் மக்கள்தொகையில் இந்தியா சீனாவை முந்தும்” - ஐ.நா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!
இந்தியாவில் ஆண்டுதோறும் மக்கள் தொகை வெகுவாக அதிகரித்துவரும் நிலையில், 2027-ஆம் ஆண்டுவாக்கில், சீனாவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடிக்கும் என ஐ.நா சபை கணித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை, 1989ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11ம் தேதியை உலக மக்கள் தொகை தினத்தை அனுசரித்து வருகிறது. உலக மக்கள்தொகை 5 பில்லியனை எட்டிய நாளான 1987 ஜூலை 11ம் தேதியை நினைவுகூரும் வகையில் இந்த தேதி தேர்வு செய்யப்பட்டது.
தற்போது உலக மக்கள் தொகை 770 கோடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், மக்கள் தொகை பெருக்கும் குறித்து ஐ.நா.சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக மக்கள்தொகை 2050ம் ஆண்டு 970 கோடியையும், 2100ல் 1,100 கோடியையும் எட்டும் எனக் கணித்துள்ளது.
உலக மக்கட்தொகையில் சீனா 19 சதவீதத்தைக் கொண்டுள்ளது. உலக நிலப்பரப்பில் வெறும் 2 சதவீதம் மட்டுமே கொண்டுள்ள இந்தியா மக்கள் தொகையில் 18 சதவீதத்தை கொண்டுள்ளது. இந்தியாவின் தற்போதைய மக்கட்தொகை 139 கோடி ஆகும்.
இதே வேகத்தில் மக்கட்தொகை அதிகரித்தால், 2027-ம் ஆண்டில் இந்தியா சீனாவை பின்னுக்குத் தள்ளி மக்கட்தொகையில் முதலிடம் பிடிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2100ம் ஆண்டுவாக்கில் இந்தியாவின் மக்கட்தொகை 1.5 பில்லியனாகவும், சீனாவின் மக்கட்தொகை 1 பில்லியனாகவும் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
"SIR உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் மட்டுமே" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
“S.I.R-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்கு தாக்கல் செய்யும்!: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!
-
SIR விவகாரம் : முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்... 40 கட்சிகள் பங்கேற்பு! - விவரம்!
-
ஒக்கியம் மடுவு கால்வாயில் ரூ.27 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு!