India
“சடலங்களுடன் 2 நாட்களாக ஒரே வார்டில் இருந்த கொரோனா நோயாளிகள்” : பீகாரில் நடந்த கொடுமை!
பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடலை அப்புறப்படுத்தாமல் 2 நாட்களாக சிகிச்சை அளிக்கும் அறையில் வைத்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
பாட்னா அரசு மருத்துவமனையில், கொரோனா சிகிச்சை அளிக்கும் அறை ஒன்றில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோரின் உடல்களை வாங்க உறவினர்கள் யாரும் முன்வராத காரணத்தால் அதே இடத்தில் சடலத்தை விட்டுவிட்டு மருத்துவமனை ஊழியர்களும் அடுத்தவேலையை பார்க்கச் சென்றுவிட்டனர்.
இதனால் அங்கிருந்த நோயாளிகள் கடும் அவதியடைந்துள்ளனர். இதனையடுத்து இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மருத்துவமனை நிர்வாகம் அவசர அவசரமாக உடல்களை அப்புறப்படுத்தியது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை பிணவறையில் ஏன் வைக்கப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் நோயாளிகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யவும் வலியுறுத்தியுள்ளனர்.
Also Read
-
சென்னையில் நாளை 12 வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் : இடங்கள் விவரங்களை வெளியிட்டது மாநகராட்சி !
-
ஆசியாவிலேயே முதல்முறை... சென்னையில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு AI கற்றுக்கொடுக்க சிறப்புத் திட்டம் !
-
பிரான்ஸின் வால் டி லாயர் மாகாண சுற்றுலாத்துறையுடன் தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஒப்பந்தம்! - விவரம் என்ன?
-
தமிழ்நாடு வக்பு வாரியம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!
-
சிறந்த கைவினைஞர்களுக்கு மாநில விருதுகள்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!