India
“மோடி ஆட்சியில் வரலாறு காணாத பொருளாதார சரிவை இந்தியா சந்திக்கும்” : ஐ.எம்.எப் அதிர்ச்சி தகவல்!
இந்தியா வரலாறு காணாத பொருளாதார சரிவைச் சந்திக்கப் போவதாக சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மேலும் 2020ம் ஆண்டில் 4.5 சதவிகிதம் அளவிற்கு இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் என்றும் எந்த அமைப்பு கணக்கிட்டுள்ளது.
இதுதொடர்பாக, சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதார வல்லுநர் கீதா கோபிநாத் கூறுகையில், “2020ம் ஆண்டில் 4.5 சதவிகிதம் அளவுக்கு இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியுடன் இருக்கும் என்று நாங்கள் அறிந்துள்ளோம்.
இந்தியாவில் நீண்டகாலமாக ஊரடங்கு நடைமுறையை பின்பற்றுவது மற்றும் ஏப்ரலில் எதிர்பார்த்ததை விடவும் குறைவாக பொருளாதார வளர்ச்சி இருப்பது ஆகியவையே இந்த பொருளாதார வளர்ச்சிக் குறைவுக்குக் காரணம் என்றும் ஐ.எம்.எப் அறிக்கையிலேயே தெளிவுபடுத்தியுள்ளோம்.
4.5 சதவிகித பொருளாதார வீழ்ச்சியானது, 1961-ஆம் ஆண்டிற்குப் பிறகு, ஐ.எம்.எப் கணித்துள்ள, இந்தியா தொடர்பான மிகக் மோசமான பொருளாதார வளர்ச்சி மதிப்பீடாகும். மூன்று மாதங்களுக்கு முன்பு வரை, சாதகமான வளர்ச்சியைத் திருப்பக்கூடிய ஆற்றல் கொண்ட இரண்டு வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்றாக இருந்தது. தற்போது அந்த இடத்தை இந்தியா இழந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அறிக்கையில் கூறி தகவலின் படி, 2020ம் ஆண்டுக்கான உலகளாவிய பொருளாதார வளர்ச்சியையும் 4.9 சதவிகிதம் என்று குறைத் துள்ள ஐஎம்எப், 2020 ஆம் ஆண்டில், சீனாவைத் தவிர்த்து, மற்றஅனைத்து நாடுகளும் முதன்முறையாக சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பீட்டின் படி எதிர்மறையான வளர்ச்சியையே காணும் என்று குறிப்பிட்டுள்ளது.
Also Read
-
"ஹமாஸின் தலைநகரமான காசா அழிக்கப்படும்"- இஸ்ரேல் அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை !
-
முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்க கைது : இலங்கையில் நடப்பது என்ன?
-
ரம்மியை ஆதரித்த ஆர்.என்.ரவி இப்போது எங்கே போனார்? : முரசொலி சரமாரி கேள்வி!
-
"Likes கெத்து இல்லை! Marks, Degrees- தான் உண்மையான கெத்து" - மாணவர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை !
-
“தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் விவரம் என்ன?” : நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கேள்வி!