India
“இந்தியாவின் 17 மாநிலங்களில் ஜூன் 15க்குள் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு அதிகரிக்கும்” - ஐ.நா எச்சரிக்கை!
இந்தியாவில் ஒருபுறம் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வரும் வேளையில், பாலைவன வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் பொதுமக்களும், விவசாயிகளும் மிகப்பெரிய அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஒரு நாளுக்கு 200 கிலோமீட்டர் தொலைவு வரை பறந்து செல்லும் திறனுடைய இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் ஆப்பிரிகா, அரபு மற்றும் பாகிஸ்தான் நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் தனது தாக்குதலை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் உள்ள விளை பயிர்களை இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் நாசமாக்கி வருகின்றன. ஏற்கெனவே விளை பயிர்களுக்கு உரிய விலை கிடைக்காமல் நொந்துபோயுள்ள விவசாயிகளுக்கு இந்த வெட்டுக்கிளிகள் மேலும் இன்னல்களை கொடுத்து வருகிறது.
இந்நிலையில், ஜூன் மாதம் 15ம் தேதிக்குள் இந்தியாவில் 17 மாநிலங்களில் பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுக்கும் என ஐக்கிய நாடுகள் சபைகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஆண்டை விட அதிக அளவிளான பாதிப்பை இந்த வெட்டுக்கிளிகள் ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளது.
அதேபோல, ஏற்கெனவே பாதிக்கப்பட்ட மாநிலங்கள் நீங்கலாக கர்நாடகா, தெலங்கானா, உத்தரகாண்ட் இமாச்சல பிரதேசம், டெல்லி என 12 மாநிலங்களில் எதிர்வரும் நாட்களில் பாலைவன வெட்டுக்கிளிகளின் தாக்குதல் இருக்கும் என மத்திய வேளாண் துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Also Read: “ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்” - வெட்டுக்கிளி தொல்லையை ஒழிக்க பாகிஸ்தான் எடுத்த அதிரடி முடிவு!
முன்னதாக, வட மாநிலங்களில் பாலைவன வெட்டுக்கிளிகளை விரட்டுவதற்காக 89 தீயணைப்பு படைகள், 120 கண்காணிப்பு மற்றும் ஸ்ப்ரே சாதனங்கள், 47 கட்டுப்பாட்டு வாகனங்கள், 810 டிராக்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தென் மாநிலங்களிலும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு அதிகரிக்கும் என ஐ.நா எச்சரித்துள்ள நிலையில், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!