India

“இந்தாண்டு 100 நாட்கள் மட்டுமே பள்ளிகளில் வேலை நாட்கள்” - மத்திய அரசு திட்டம்!

வரும் கல்வி ஆண்டுக்கான பள்ளி வேலை நாட்களை 100 நாட்களாகக் குறைக்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

கொரோனா பாதிப்பு காரணமாக ஜூன் மாதம் தொடங்க வேண்டிய கல்வி ஆண்டு மூன்று மாதங்கள் தாமதம் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஆக்ஸ்ட் மாதத்திலும், மற்ற மாணவர்களுக்கு செப்டம்பரில் மட்டுமே பள்ளிகளைத் திறக்க இயலும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

எனவே, வரும் கல்வி ஆண்டுக்கான பணி நாட்களை வழக்கமான 220 நாட்களிலிருந்து 100 நாட்களாகக் குறைக்க மனிதவள மேம்பாட்டுத் துறை ஆலோசனைகளை நடத்துவருகிறது.

அதன்படி, 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் வகுப்புகள் நடத்தலாம் எனத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

6 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு அதிகபட்சமாக 4 நாட்களும், 9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக 5 நாட்கள் வரை வகுப்புகளை நடத்தலாம் என்றும் புதிய வரைமுறைகளை வகுத்துள்ளதாகத் தெரிகிறது.

மற்ற நாட்களில் மாணவர்கள் வீட்டிலிருந்தே படிக்க ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். அதுபோல் 9 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு பாடத்திட்டத்தையும் குறைக்கத் திட்டமிட்டுள்ளது.

மேலும், போதிய இடைவெளியுடன் வகுப்புகளை நடத்துவற்கான வழிகாட்டி நெறிமுறைகளை தேசிய அளவில் வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Also Read: தினந்தினம் உச்சத்தைத் தொடும் கொரோனா பரவல் : தமிழகத்தில் 20,000-ஐ கடந்தது பாதிப்பு... 154 பேர் பலி!