India

“பட்டப்பகலில் பலர் முன்னிலையில் உள்ளூர் அரசியல் பிரமுகரும், அவரது மகனும் சுட்டுக்கொலை”- உ.பியில் கொடூரம்!

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ளூர் சமாஜ்வாடி கட்சி பிரமுகரையும், அவரது மகனையும் இருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் உள்ள ஷாம்சோய் கிராமத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலைஉறுதித் திட்டத்தின் கீழ் சாலைபோடப்பட்டு வந்தது. சாலை அமைக்கும் பணிகள் வயலை ஆக்கிரமித்து நடைபெறுவதாகக் கூறி வயலின் உரிமையாளர், கிராம தலைவரின் கணவரும், உள்ளூர் சமாஜ்வாடி கட்சி பிரமுகருமான சோட் லால் திவாகரிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், சமாஜ்வாடி கட்சி பிரமுகர் சோட் லால் திவாகர் மற்றும் அவரது மகன் சுனில் ஆகியோர் கிராமத்தில் சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்யச் சென்றுள்ளனர். அப்போது, வயலின் உரிமையாளர்கள் இருவருடனும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றியதில் அவர்கள், சோட் லால் திவாகர் மற்றும் அவரது மகன் சுனிலை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் சோட் லால் திவாகரும் அவரது மகன் சுனினும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த துப்பாக்கிச் சூடு வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகளில் ஒருவர் சவீந்தர் என அடையாளம் காணப்பட்டார். அவர் அந்த ஊரில் செல்வாக்கு மிகுந்தவர் எனக் கூறப்படுகிறது.

இந்தக் கொலை விவாகரத்திற்கு காரணமானவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. பட்டப்பகலில் பலர் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ‘சாலையில் செல்லும்போது சுருண்டு விழுந்த வடமாநில இளைஞர்’ - பட்டினிக் கொடுமையால் உயிரிழந்த சோகம்!