India
“எங்க அப்பா, அம்மா, மிஸ்சை கைது பண்ணுங்க” : டியூசன் அனுப்பியதால் போலிஸாரிடம் புகார் அளித்த சிறுவன்!
கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து நாடுமுழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊர்டங்கால் பல முக்கிய தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் படாலா பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுவன் ஒருவனை ஊரடங்கு நேரத்தில் அவரது பெற்றோர்கள் கட்டாயப்படுத்தி டியூசன் அனுப்பி வைத்துள்ளனர். அதனால் அதிருப்தி அடைந்த சிறுவன் டியூசன் செல்லாமல் படாலா காவல் நிலையத்திற்கு சென்றுள்ளான்.
அழுகையும் ஆத்திரமுமாய் வந்த சிறுவனை அழைத்து போலிஸார் ஏன் இங்கே வந்தீர்கள் என கேட்டுள்ளனர். அப்போது தனது அழுகையை நிறுத்தி பேச தொடங்கிய சிறுவன், அனைவரும் வீ்ட்டில் இருக்கும்போது தன்னை மட்டும் பெற்றோர் வற்புறுத்தி டியூசன் அனுப்பிவைப்பதாக போலீஸ் அதிகாரிகளிடம் புகார் கூறியுள்ளான்.
அதுமட்டுமின்றி, தன்னை டியூசன் அனுப்பி வைத்த அம்மா, அப்பா மற்றும் டியூசன் டீச்சர் ஆகியோரை கைது செய்யவேண்டும் என கூறியுள்ளான். இதனையடுத்து சிறுவனை அழைத்துக்கொண்டு டியூசன் எடுக்கும் ஆசிரியை வீட்டிற்கு சென்ற டி.எஸ்.பி குர்திப் சிங், அவரிடம் டியூசன் எடுக்கிறீர்களா? எனக் கேட்டார்.
அப்போது ஆசிரியர் இல்லை என மறுக்க சிறுவன் உடனே இல்லை இல்லை தனக்கு மட்டும் டியூசன் எடுப்பதாக கூறியுள்ளான். பின்னர் அவரும் உண்மையை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து இனி டியூசன் எடுக்கக்கூடாது என ஆசிரியருக்கு எச்சரிக்கை விடுத்துவிட்டு அங்கிருந்து சிறுவனின் வீட்டிற்குச் சென்று பெற்றோரிடம் அறிவுரை கூறி சிறுவனை ஒப்படைத்தார். இந்த சம்பவம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
Also Read
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!