India
“பாசிட்டிவ்.. நெகட்டிவ்.. மீண்டும் பாசிட்டிவ்” : உயிரிழந்த கொரோனா நோயாளி - அதிர்ச்சி தகவல்! #Covid19
கொரோனா வைரஸ் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு முதலில் பாசிட்டிவ் என்றும் பிறகு நெகட்டிவ் என்றும், மீண்டும் பாசிட்டிவ் என்றும் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த 68 வயதான நபர் ஒருவர், கடந்த ஏப்ரல் 22ம் தேதி பங்கூர் மருத்துவமனையில் கொரோனா அறிகுறிகளோடு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாகத் தெரிவித்து, வீட்டிலேயே அவரும், அவரது குடும்ப உறுப்பினர்களும் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தினர்.
ஆனால், அடுத்த நாளே அவருக்கு கொரோனா தொற்று இல்லை எனவும், பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்துவிட்டது என்றும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவரும் அவரது குடும்பத்தினரும் நிம்மதியடைந்தனர்.
ஆனால், அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. மீண்டும் சுகாதாரத்துறையிடமிருந்து வந்த தகவலில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான குழப்பம் எப்படி ஏற்பட்டது எனத் தெரியவில்லை.
இந்நிலையில், அவர் இன்று உயிரிழந்தார். இந்த நிகழ்வு அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி, மேற்கு வங்க மாநில மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் மரணமடைந்தவரின் குடும்பத்தில் உள்ள அவரது மனைவி, மகன், மருமகள், பேரக் குழந்தைகள் உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
Also Read
-
6 நாட்களில் 1,500 டன் கழிவுகள்... தமிழ்நாடு முழுவதும் SIPCOT தொழிற்பூங்காக்களிலில் மாபெரும் தூய்மைப் பணி!
-
கோலகலமாக நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... முதல் 3 பரிசுகளை வென்றது யார்? என்ன? - விவரம் உள்ளே!
-
5-வது இடத்தில் இறங்கி ஆடிய KL ராகுல்… கொண்டாடிய ரசிகர்கள்... காரணம் என்ன?
-
‘டால்பின்’ அன்புமணி.. வெளியேற தயாரா?.. - அன்புமணியை அறிக்கை மூலம் விளாசிய அமைச்சர் MRK பன்னீர்செல்வம்!
-
வடகிழக்குப் பருவமழை, புயல்... விவசாயிகளுக்கு ரூ.111.96 கோடி நிவாரணத்தொகை.. அரசாணை வெளியீடு!