India

“கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,500-ஐ தாண்டியது” : மோசமான நிலையில் இந்தியா?

சீனாவில் தொடங்கிய கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிகத் தீவிரமாக பரவிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான நாடுகள் தங்கள் எல்லைகளை மூடி தங்கள் மக்களை பாதுகாத்து வருகின்றன. இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தபோதிலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவது நாட்டு மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நாடு முழுவதும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,506 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 775 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1058 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 57 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில்மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகபட்சமாக 6,817 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் மகாராஷ்டிர மாநிலத்தில் 400க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 840 ஆக உயர்ந்துள்ளது.

அடுத்த இடத்தில் 2815 பேருக்கு தொற்று பாதிப்புடன் குஜராத் மாநிலம் 2ம் இடத்தில் உள்ளது. அங்கு, 127 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 265 பேர் குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் 6-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 1755 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 866 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது சுகாதாரத்துறை மீது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. ஒருவேளை வைரஸை எதிர்கொள்ளும் அளவிற்கு மோடி அரசிடம் திட்டங்கள் மற்றும் மருத்துவ வசதிகள் இல்லையா என்ற கேள்வியும், சந்தேகமும் பரவலாக எழத் தொடங்கி உள்ளது.

Also Read: “கொரோன பரவலின் வீரியம் மே மாதத்தில் பயங்கரமாகும் - பலி எண்ணிக்கை 38 ஆயிரத்தை கடக்கும்”: அதிர்ச்சி தகவல்!