India

“ஊரடங்கால் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்கொடுமை அதிகரிப்பு” : 11 நாளில் 92 ஆயிரம் புகார் அழைப்பு!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடுமுழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. கல்வி நிலையங்கள், தொழிற்சாலைகள் என அனைத்தும் மூடப்பட்டதால் குழந்தைகள் உள்ளிட்டோர் வீட்டில் இருப்போர்கள் ஒரே இடத்தில் முடங்கிக்கிடக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தினசரி கூலித் தொழிலாளர்கள் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பலர் தங்களின் பணப்பிரச்சனை, வேலையிழப்பு போன்றக் காரணங்களால் கடுமையான மன அழுத்ததிற்கு ஆளாயுள்ளனர். இந்த சூழலில், வீடுகளில் உள்ள பெண்கள், குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்கொடுமை அதிகரித்துள்ளது. இதனை தடுக்கவும் உரிய நடவடிக்க எடுக்ககோரிஅரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன்படி சமீபத்தில், குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை புகார் அளிக்க '1098' என்ற தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த எண்ணுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட முதல் வாரம், அதாவது, மார்ச், 20ம் தேதி முதல் 31ம் தேதி வரை மட்டும் 3.07 லட்சம் புகார்கள் வந்துள்ளன.

அவற்றில் 30 சதவீதம், அதாவது, 92 ஆயிரம் புகார்கள் குழந்தைகள் மீதான வன்முறை தொடர்பானவை என கூறப்படுகிறது. இந்த தகவலை இந்திய குழந்தைகள் உதவி மையத்தின் துணை இயக்குனர், ஹர்லின் வாலியா உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், ஊரடங்கு உத்தரவுக்குப் பின், அழைப்புகள் எண்ணிக்கை, 50 சதவீதம் அதிகரித்துள்ளது. குழந்தை தொழிலாளர்கள் தொடர்பாகவும், வீடின்றி தவிக்கும் குழந்தைகள் தொடர்பாகவும் புகார்கள் வந்து உள்ளன.

இதேநிலையில், பெண்கள் மீதான் வன்முறையும் அதிகரித்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையத்தின் சார்பில் வெளியான அறிக்கையில், “ஊரடங்கு உத்தரவால், பெண்கள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது குறித்த புள்ளி விபரங்களை வெளியிட்டார். அதன்படி, மார்ச், 24 முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை, பெண்கள் மீதான வன்முறை தொடர்பாக, 257 புகார்கள் வந்துள்ளன. அவற்றில், 69 புகார்கள், குடும்ப வன்முறை சம்பந்தப்பட்டவை” என அதில் தெரிவித்துள்ளனர்.

Also Read: “வாகனங்களை சேதப்படுத்தி வன்முறை - காவல்துறையினருக்கு கட்டுப்பாட்டு தேவை” : மனித உரிமை ஆணையம் அதிரடி!