India
“கொரோனா பரவல் அபாயகரமான மூன்றாம் கட்டத்தை எட்டுகிறது” : 5 - 10 நாட்களில் சமூக தொற்று அதிகரிக்க வாய்ப்பு?
கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1021 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் 19 பேர் இறந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு இரண்டாம் கட்டத்தில் உள்ள நிலையில் நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு, கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளனர். ஆனால் நோய் தொற்று என்பது அதிகரித்தவாறே உள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் முதல் மற்றும் இரண்டாம் நிலையை கடந்து, சமூக தொற்று எனப்படும் அபாயகரமான மூன்றாம் கட்டத்தை அடுத்த 5 முதல் 10 நாட்களில் இந்தியா சந்திக்கும் என நிதி ஆயோக்கின் சிறப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நிதி ஆயோக்கின் சிறப்புக் குழு ஒருங்கிணைப்பாளரான கிரிதர் கியானி இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது, “இந்தியாவில் என்னவேண்டுமானலும் நடக்கும் சூழல்தான் தற்போது உள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதில் மூன்றாவது கட்டம் மிகவும் ஆபத்தனது. யாரிடம் இருந்து இந்த தொற்று தொற்றிக்கொண்டது என்பதை கண்காணிக்கவே முடியாது; அவ்வளவு கடினம். இந்தியாவில் தற்போது மூன்றாம் கட்டத்திற்கு செல்லவில்லை என்றாலும், சமூக பரவல் மூலம் மூன்றாம் கட்டத்தை நோக்கி இந்தியா நகர்ந்துள்ளது.
இன்னும், 5 அல்லது 10 நாட்களில் கொரோனா அறிகுறி அல்லாதவர்களுக்கு கூட அறிகுறி தென்பட வாய்ப்பு உள்ளது. திடீரென பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, தற்போது காய்ச்சல், இருமல், மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படுகிறது.
அதற்கு காரணம் இந்தியாவில் போதிய அளவில் பரிசோதனைக்கான மருத்துவ உபகரணங்கள் இல்லை. மார்ச் 25ம் தேதியின் படி, நாடு முழுவதும் 118 பரிசோதனை ஆய்வகங்களும், நாளொன்றுக்கு 15 ஆயிரம் நோயாளிகளை பரிசோதிக்கவும் மட்டுமே வசதி உள்ளது.
இது தவிர 16 தனியார் மருத்துவமனை ஆய்வகங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, கொரோனாவைத் தடுக்க விரைந்து செயல்பட வேண்டிய சூழலில் இருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் கடந்த 24ம் தேதி நடந்த சுகாதாரத் துறையினருக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றவர்களில் கிரிதர் கியானியும் ஒருவர். இவர்சுகாதார ஆலோசகர்கள் அமைப்பின் நிறுவனராகவும், இந்திய தர மேலாண்மை கவுன்சலின் பொது செயலாளராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!