India

#Corona Alert : கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்னென்ன? : தொற்று ஏற்பட்டால் என்ன செய்யவேண்டும்?

சீனாவில் தொற்றத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. ஆரம்பத்தில் சாதாரண வைரஸ் காய்ச்சலைப் போல இருக்கும் அறிகுறிகள், தீவிரமடைந்து உயிரிழப்புக்கு இட்டுச்செல்லும் என்பதால் கொரோனா குறித்த அச்சம் உலக மக்களிடையே அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸிலிருந்து குறித்து காத்துக்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்து சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. அவை பின்வருமாறு :

1. காய்ச்சல், தொடர் இருமல், தும்மல், அதீத களைப்பு, மூச்சுத்திணறல் இவற்றுடன் சில நேரங்களில் வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு ஆகியவை இருந்தால், அது கொரோனா அறிகுறியாக இருக்கலாம். இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகாமையிலுள்ள மருத்துவரை அணுகவேண்டும்.

2. கோவிட் 19 எனும் கொரோனா வைரஸ் தீவிரமாக இருந்தால், நிமோனியா, சிறுநீரக பாதிப்பு, தீவிர சுவாசப் பிரச்சனை தொடங்கி உயிரிழப்பும் ஏற்படலாம். இந்த அறிகுறிகள் ஐந்து நாட்களில் இருந்து வாரங்கள் கடந்தும் தெரியலாம்.

3. கொரோனா வைரஸ், மனிதரிடமிருந்து மனிதருக்குப் பரவுகிறது. கொரோனா பாதித்த ஒருவரது எச்சில் அல்லது சளி மூலம் இந்நோய் பரவ வாய்ப்பு உண்டு. எனவே, வெளியில் சென்றுவந்தால் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். கண்கள், மூக்கு, வாய் ஆகியவற்றை அடிக்கடி தொடுவதை தவிர்க்கவேண்டும். N95 முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும்.

4. கொரோனா அறிகுறி இருப்பதாகத் தெரிந்தால், நம்மை நாமே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். கைகளை கழுவும்போது, வெறுமனே குழாய் நீரில் நீட்டிவிட்டு எடுத்துவிடாமல், சோப்பு போட்டு, நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும்.

5. கொரோனா அறிகுறி இருந்தால், மத்திய சுகாதார அமைச்சகத்தின் 24 மணி நேர உதவி எண்ணான, 01123978046 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், 104 இலவச மருத்துவ சேவை எண்ணைப் பயன்படுத்தி தகவல் அளிக்கலாம். இதுதவிர 044-29510400, 044-29510500, அல்லது 94443 40496, 87544 48477 என்ற எண்களைத் தொடர்பு கொண்டு தகவல் தரலாம்.

6. ஒருவர் கொரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டால், அவருக்கு ஏற்பட்டிருக்கும் காய்ச்சல் மற்றும் அதீத களைப்பைக் குறைப்பதற்கான சிகிச்சை முன்னெடுக்கப்படுகிறது. கொரோனா பாதிப்பு அறிகுறியுடன் அனுமதிக்கப்படுவோர் தனிமை வார்டி, நல்ல காற்றோட்டத்தில் பராமரிக்கப்படவேண்டும்.

Also Read: #Corona : கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மனைவிக்கு கொரோனா பாதிப்பு - தனிமைப்படுத்தப்பட்டதாக அறிவிப்பு!