India
"டெல்லியின் எதிர்காலத்தை வெறுப்பும் வன்முறையும் எரித்துவிட்டன”-பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட ராகுல்!
டெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘வளர்ச்சிக்கு வன்முறையே எதிரி’ எனத் தெரிவித்துள்ளார்.
டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்களுக்கும், ஆதரவாகப் பேரணி நடத்தியவர்களுக்குமிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. இதில், பல வீடுகள், கடைகள், வாகனங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.
இந்துத்வா கும்பல் முன்னெடுத்த இந்த வன்முறையில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த வன்முறை நிகழ்ந்தபோது காவல்துறையினர் வன்முறையைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
வன்முறையைக் கட்டுப்படுத்தத் தவறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்து வருகிறது.
இந்நிலையில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று பார்வையிட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "டெல்லியின் எதிர்காலமான பள்ளிக்கூடங்களை வெறுப்பும், வன்முறையும் சேர்ந்து அழித்துவிட்டன. உலக நாடுகள் மத்தியில் நமது நற்பெயர் சிதைக்கப்பட்டுவிட்டது.
இந்த வன்முறையால் பாரத மாதாவுக்கு எந்த நன்மையும் இல்லை. நாட்டின் வளர்ச்சிக்கு வன்முறையே எதிரியாகும். இந்த நேரத்தில் அனைவரும் ஒன்றிணைந்து இந்தியாவை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
சென்னையில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தெருநாய்களுக்கு தடுப்பூசி... மாநகராட்சி தகவல் !
-
”பிரதமர் மோடி பேசியது அபாண்டமானது; பேசக்கூடாதது” : ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்!
-
தெருநாய் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன... முழு விவரம் உள்ளே !
-
”ஓராண்டில் 15,500 பேர் மலையேற்றம்” : சுற்றுலாத்துறையில் முன்மாதிரியாக திகழும் தமிழ்நாடு!
-
கல்லறைத் தோட்டங்கள் - கபர்ஸ்தான்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய ஆணை என்ன?