India
42 அப்பாவிகள் உயிர்போகக் காரணமான அ.தி.மு.க - பா.ம.க.,வின் 12 வாக்குகள் : வரலாற்றுப் பிழை செய்த அடிமைகள்!
மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியது. இது அரசியலமைப்புச் சட்டம் கூறும் மதச்சார்பின்மைக்கு எதிரான நடவடிக்கை என எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் மக்களவையில் தங்களுக்குள்ள பெரும்பான்மை பலத்தை மக்கள் வாழ்வு மேம்பாட்டுக்கும், நாட்டு முன்னேற்றத்திற்கும் பயன்படுத்துவதை விடுத்து, மத்திய பா.ஜ.க அரசு, பிற்போக்கான காரியங்களிலேயே கவனம் செலுத்துகிறது என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.
குறிப்பாக மதவாதக் கண்ணோட்டத்துடன் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் முஸ்லிம் சிறுபான்மை மக்களும், ஈழத்தமிழர்களும் குடியுரிமை பெற இயலாமல், பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் சூழல் உருவாகியுள்ளது.
மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற காலத்திலிருந்து முத்தலாக், காஷ்மீர் பிரச்னை என தொடர்ந்து தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் என தொடர்ச்சியாக இஸ்லாமிய சமூகத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
மோலும் அதற்கு எதிராக நடைபெறும் போராட்டங்களை சகித்துக்கொள்ளாத மோடி அரசு டெல்லி ஜாமியா, உத்தர பிரதேசத்தின் அலிகார் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் காவல்துறையினரை ஏவிட்டு கொடூரமான தாக்குதலை கட்டவிழ்த்து விட்டதைக் கண்டு நாடே பதறியது.
அதன் தொடர்ச்சியாக டெல்லி ஷாஹீன்பாக்கிலும் 70 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடைபெற்றது. அமைதியாக நடைபெறும் போராட்டத்தை சீர்குலைக்க பல்வேறு மோசமான நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் மேற்கொண்டது. அதேபோல் வடகிழக்கு டெல்லியில் நடைபெற்ற அமைதிப் போராட்டத்தையும் வன்முறையாகியது பா.ஜ.க-வின் அரசியலே.
இந்த வன்முறையில் இஸ்லாமியர்கள் குறிவைத்து தாக்கப்பட்டார்கள். அவர்கள் வீடுகள் சூறையாடப்பட்டது. வன்முறையில் இந்துத்வா நடத்திய தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டனர். அதில் பலர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியது டெல்லி காவல்துறையல்ல; வன்முறையாளர்கள்.
திருமணமான 11 நாளில் உயிரிழந்த இளைஞர், பால் வாங்கச் சென்ற தந்தை உயிரிழந்த கொடூரம் என அடுக்கிக்கொண்டே போகலாம். பெரும் வன்முறைக்கு இஸ்லாமியர்கள் மீது இந்துத்வா கும்பல் நடத்திய தாக்குதலே தொடக்கமாக அமைந்தது. இதற்கு மூலகர்த்தா பா.ஜ.க அரசும், அதன் அடிவருடிகளுமே!
அந்த அடிவருடிகள் அ.தி.மு.கவும், பா.ம.கவும்தான். ஏனென்றால், இந்த சட்டம் மாநிலங்களவையில் மசோதாவாக நிறைவேறுவதற்குக் காரணமே அ.தி.மு.க.வின் 11 உறுப்பினர்களும், பா.ம.க.வின் ஒரு உறுப்பினரும் அளித்த வாக்குகள்தான். பா.ஜ.க அரசின் கைப்பாவையாக அடிமை அ.தி.மு.க. கூட்டணி செயல்பட்டு வருவது அப்பட்டமாக வெளிப்பட்டது.
அவர்களின் விசுவாசத்தை நிரூபிக்க வாக்களித்ததன் விளைவாக இன்று 42 பேர் பலியாகியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் உத்தர பிரதேசம், கர்நாடகா போன்ற இடங்களில் நடந்த தாக்குதல்களில் 20-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த பிணத்தின் மீது ஆட்சி செய்யும் மோடி அரசுக்கு எதிராக தற்போது குரல்கள் ஓங்கியுள்ளன. நாட்டின் அமைதியைச் சீர்குலைத்த பா.ஜ.க அரசுக்கும், அதன் திட்டத்தின்படியே செயல்பட்டு முஸ்லிம் சமுதாயத்தினருக்கும், ஈழத் தமிழர்களுக்கும் துரோகமிழைத்த அ.தி.மு.கவையும் அதன் கூட்டணிக் கட்சியான பா.ம.க-வையும் வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!