India
“அப்போதே முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு அனுப்பியிருக்க வேண்டும்” - மீண்டும் பா.ஜ.க அமைச்சர் சர்ச்சை பேச்சு!
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. பா.ஜ.க அரசு கொண்டுவந்த குடியுரிமைச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என மாணவர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் நடத்திவரும் போராட்டங்கள் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
ஆனால் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல என்றும், எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பொய் பிரசாரம் மேற்கொள்வதாகவும் பிரதமர் மோடி முதல் கீழ்மட்ட அளவில் இருக்கும் பா.ஜ.க தொண்டர்கள் வரை ஒரே வசனத்தை மக்கள் மத்தியில் பேசி வருகின்றனர்.
மேலும் சில பா.ஜ.க தலைவர்கள் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு அரசியலை மிகத் தீவிரமாக பரப்பி வருகின்றனர். அதிலும் குறிப்பாக மத்திய கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக இருக்கும் கிரிராஜ் சிங் வன்மம் மிகுந்த கருத்துகளைப் பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார்.
சமீபத்தில் கூட, ஷாஹீன்பாக் ஒரு இயக்கம் அல்ல. அங்கு தற்கொலைப்படை பயிற்சி அளிக்கப்படுகிறது. நாட்டின் தலைநகரில் நாட்டிற்கு எதிராக ஒரு சதி நடந்து வருகிறது எனப் பேசினார்.
அதன் தொடர்ச்சியாக தற்போது பீகார் மாநிலத்தில் பா.ஜ.கவினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “1947ம் ஆண்டுக்கு முன்பே முகமது அலி ஜின்னாஹ் இஸ்லாமிய நாடு வேண்டும் என்று வலியுறுத்தினார். அப்போது நமது முன்னோர்கள் செய்த தவறுக்கு தற்போது விலை கொடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், “முஸ்லிம்கள் அந்த நாட்டிற்கும், இந்துக்கள் நம் நாட்டிற்கும் அனுப்பப்பட்டிருந்தால், நாம் தற்போது இந்த நிலைமையில் இருந்திருக்க மாட்டோம்” என்று கிரிராஜ் சிங் பேசியுள்ளார். அவரது இந்தப் பேச்சுக்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
"அரசியல் செய்யும் மதுரை ஆதீனம், மட விவகாரங்களில் இருந்து விலக வேண்டும்" - இளைய ஆதினம் புகார் !
-
ரூ.3,201 கோடி முதலீட்டில் 6,250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் MoU!
-
சென்னையில் நாளை 13 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் : இடங்கள் குறித்த விவரம் உள்ளே !
-
”இளைஞர்களின் வெற்றியை உறுதி செய்திடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
சென்னை மெட்ரோ ரயிலுக்கு நாளுக்கு நாள் ஆதரிக்கும் பொதுமக்களின் ஆதரவு : ஆகஸ்ட்டில் 99.09 லட்சம் பேர் பயணம்!