India

“பா.ஜ.க ஆட்சியில் சில்லறை வர்த்தகம் படுமோசம்” : 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் அதிகரிப்பு !

இந்தியாவின் பொருளாதார நிலை, இதுவரை பார்த்திராத அளவுக்கு நலிவடைந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். ஆனால் மத்திய பா.ஜ.க அரசோ, நாட்டில் பொருளாதார சரிவே ஏற்படவில்லை என மூடி மறைத்து வருகிறது.

இந்நிலையில் நாட்டின் சில்லறைப் பணவீக்க விகிதம் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக செப்டம்பர் மாதத்துக்கான நாட்டின் பணவீக்க புள்ளிவிவரங்களில் மத்திய அரசின் தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் சில்லறைப் பணவீக்கம் 2019 டிசம்பரில் 7.35 சதவிகிதமாக இருந்தது, தற்போது 7.59 சதவிகிதத்தை எட்டியுள்ளது.

நவம்பர் மாதத்தில் 8.6 சதவிகிதமாக இருந்த அத்தியாவசிய பொருட்களின் விலை 18 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, தானியங்கள் வகைகள், மீன் மற்றும் இறைச்சி, முட்டை, பால் மற்றும் பால் பொருட்கள், எண்ணெய் மற்றும் கொழுப்புகள், பழங்கள், காய்கறிகள் விலை அதிகரித்துள்ளன.

மறுபுறத்தில் தொழிற்துறை உற்பத்தியும் (Index of Industrial Production) டிசம்பரில் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது. தொழில்துறை உற்பத்தி டிசம்பரில் 0.3 சதவிகிதம் அதிகரித்து 2.5 சதவிகிதமாக தற்போது உள்ளது.

நாட்டின் பணவீக்க விகிதத்தைத் தீர்மானிக்கும் பிரிவுகளில், உணவுப் பொருட்கள் பணவீக்கமே முக்கிய இடத்தை வகிக்கிறது. அந்த வகையில் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்ததே தற்போதைய சில்லறைப் பணவீக்க உயர்வுக்கும் காரணம் என்று கூறப்படுகிறது.

Also Read: 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்றுமதி, இறக்குமதி சரிவு : இந்திய வர்த்தகம் குலையும் அபாயம்