India

SC,ST பிரிவினருக்கு அரசு துறையில் இடஒதுக்கீடு இருக்கிறதா? இல்லையா? - உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

அரசு துறைகளில் பதவி உயர்வில் எஸ்.சி, எஸ்.டி வகுப்பினருக்கு போதிய இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்த மசோதா கடந்த 2012ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதுதொடர்பாக தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், சாதி ரீதியான இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்று 2018ம் ஆண்டு அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்தும் பல்வேறு மாநிலங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன. அவை தற்போதைய தலைமை நீதிபதி அமர்வில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், உத்தரகாண்ட் மாநில பொதுப்பணித்துறையில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு நீதிபதி நாகேஷ்வர ராவ் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, பதவி உயர்வில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க மாநிலங்களுக்கு உத்தரவிட எந்த அடிப்படை உரிமையும் இல்லை என்று தெரிவித்தது. சட்டவிதி 16ன் கீழ் மாநில அரசுகளே அனைத்து முடிவையும் எடுக்கலாம் என்றும் கூறியிருக்கிறது.