India
“நிதிக்குழு பரிந்துரையால் தென் மாநிலங்கள் வருவாயை இழக்கும்” - பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை!
மத்திய அரசு வசூலிக்கும் வரி வருவாயை மாநில அரசுகளுக்கு எப்படி பகிர்ந்து அளிக்க வேண்டும் எனத் தீர்மானிக்கும் அமைப்பாக நிதிக்குழு செயல்படும். அந்த வகையில், அனைத்து மாநிலங்களுக்கும் 2021-2026க்கான நிதி விநியோகத்தை வகுத்து பரிந்துரையாக மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது 15வது நிதிக்குழு.
அதில், மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதியில் 14வது நிதிக்குழு கூறியதை விட ஒரு சதவிகிதம் குறைவாகவே 15வது நிதிக்குழு மதிப்பிட்டுள்ளது. அதன்படி, 42 சதவிகிதமாக இருந்த நிதி பகிர்ந்தளிப்பை 41 சதவிகிதமாக குறைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அனைத்து மாநிலங்களுக்கான நிதி தலா ஒரு சதவிகிதம் குறைக்கப்படுவதை வைத்து இரண்டாக பிரிக்கப்பட்டிருக்கும் ஜம்மு காஷ்மீருக்கான திட்டங்களுக்கு செலவிடப்படும் என்ற காரணத்தை நிதிக்குழு கூறியுள்ளது.
14வது நிதிக்குழுப்படி 42% பரிந்துரைக்கப்பட்டாலும் செஸ் வரி போக திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி 33 சதவிகிதமே வழங்கப்பட்டுள்ளது. இதனால் மாநிலங்களுக்கான வரி வருவாயிலிருந்து 8 லட்சம் கோடி மட்டுமே கிடைத்துள்ளது.
ஆனால் நடப்பாண்டில் 15வது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி நிதி கொடுக்கப்பட்டால் இந்தியாவில் தென்மாநிலங்களே வெகுவாக பாதிக்கப்படும்.
அதன்படி, வளர்ச்சியடைந்த மாநிலங்களாக கருதப்படும் தமிழ்நாடு புதிய நிதி விநியோகத்தால் மேலும் பாதிக்கப்படுவதோடு, மாநிலம் ஒன்றுக்கு 10 ஆயிரம் கோடி அளவுக்கு நஷ்டம் உண்டாகும் நிலைக்கு தள்ளப்படும்.
வளர்ச்சி பெற்றுவிட்டது என்பதற்காக மாநிலங்களுக்கு கிடைக்கப்பட வேண்டிய நிதியை குறைவாக கொடுப்பதினால் எந்த லாபமும் பெற்றுவிடப்போவதில்லை.
Also Read: தலைசுற்ற வைக்கும் பட்ஜெட் மோசடி: “இதுதான் உங்கள் பட்ஜெட்டா?” - ஜெயரஞ்சன் மிரட்டல் பேச்சு!
அந்த வளர்ச்சியை தக்க வைத்துக்கொள்வதற்காகவும், அதனை அடுத்தகட்டத்துக்கு இட்டுச் செல்வதற்காகவும் வரி வருவாய் முக்கிய பங்காற்றுகிறது என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், உத்தர பிரதேசம், பீகார் போன்ற வட மாநிலங்களுக்கு வரி வருவாயை வாரி இறைக்கும் மத்திய அரசு இதுவரையில் அந்த மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து நிதிக்குழு மதிப்பீடு செய்யுமா எனவும் பொருளாதார நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Also Read
-
நிதி நிறுவன மோசடி... பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு !
-
அகமதாபாத் விமான விபத்து : விபத்துக்கு விமானிகள் காரணம் என்பதை ஏற்கமுடியாது... விமானிகள் சங்கம் காட்டம் !
-
சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 36.08 லட்சம் உதவித்தொகை... வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“அதிமுக - பாஜக சதித்திட்டத்தை உணர்ந்து ‘ஓரணியில்’ திரளும் மக்கள்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
ஆங்கில வழிக் கல்விக்கு எதிரான தேசிய கல்விக் கொள்கை! : ‘தி இந்து’ தலையங்கம் விமர்சனம்!