India
பெருமைமிகு கீழடியைப் புறக்கணிப்பதா? - பட்ஜெட் உரையின் போது தி.மு.க எம்.பிக்கள் ஆவேசம்!
சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முன்பு தமிழர் நாகரிகம் இருந்துள்ளது என கீழடி அகழாய்வு மூலம் தெரிய வந்துள்ளது. அதேபோல, உலகின் பழமை வாய்ந்த நகரங்களில் ஆதிச்சநல்லூரும் ஒன்று எனக் கூறப்படுகிறது.
இதுவரையில் ஆதிச்சநல்லூரில் இருந்து கிடைக்கப் பெற்ற பொருட்களை கொண்டு கார்பன் பகுப்பாய்வு செய்ததில் கி.மு.905 மற்றும் 971ம் ஆண்டைச் சேர்ந்தது என கண்டறியப்பட்டுள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் 2020-21ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கலின் போது தமிழகத்தின் ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 5 இடங்களில் தொல்லியல் துறை சார்பில் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
அதில், தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், உத்தர பிரதேசத்தில் ஹஸ்தினாபூர், அசாமில் சிவ்சாகர், குஜராத்தில் தோலாவிரா, ஹரியானாவில் ராக்கிகர்ஹி ஆகிய 5 இடங்களில் ரூ.25 ஆயிரம் கோடி செலவில் தொல்பொருள் அருங்காட்சியகம் அமைக்கப்படும் எனக் கூறினார்.
அப்போது, 3,000 ஆண்டுகளுக்கும் முந்தைய தமிழர்களின் நாகரிகம் கீழடி அகழாய்வின் மூலம் தொடர்ந்து கண்டெடுக்கப்பட்டு வருகிறது. அதனைப் புறக்கணித்துவிட்டு ஆதிச்சநல்லூருக்கு மட்டும் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என நிதியமைச்சர் கூறியிருப்பது ஏற்கத்தக்கதல்ல என குற்றஞ்சாட்டி அவையில் தி.மு.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சி எம்.பிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஏற்கெனவே, கீழடி அகழாய்வுப் பணிக்கு நிதி ஒதுக்காமல் மத்திய அரசு அலைக்கழித்து வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டு வரும் நிலையில் தற்போது தமிழர்களின் நாகரிகத்தை சரஸ்வதி சிந்து நாகரிகம் என பெயரிட்டு சாதிகளற்ற மக்களாக திகழ்ந்த பண்டைய தமிழ் நாகரிகத்துக்கும் இந்துத்வா முத்திரையை குத்த பா.ஜ.க அரசு முற்படுகிறது என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!