India
#CAA-வுக்கு தெலங்கானாவும் எதிர்ப்பு - சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவோம் என முதல்வர் அறிவிப்பு!
பா.ஜ.க கொண்டுவந்த குடியுரிமை சட்டத்தால் இஸ்லாமியர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். மேலும், பா.ஜ.க அரசு இந்தச் சட்டம் மூலம் ‘இந்து ராஷ்ட்டிரம்’ என்ற தனது ஆர்.எஸ்.எஸ் கனவை இந்தியாவில் நிறுவ முயற்சிக்கிறது என காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநில முதல்வர்களும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கேரளா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அரசுகள் மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதனிடையே குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேற்குவங்க சட்டப்பேரவையில் விரைவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார். அவரைத் தொடர்ந்து தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தங்கள் மாநிலத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், “தெலங்கானா நடந்து முடிந்த நகராட்சி, உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியது அரசு செய்து வரக்கூடிய திட்டங்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என கூறினார்.
மேலும், “குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கேரளா, பஞ்சாப், ராஜஸ்தானை சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை போன்று, தெலங்கானா சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்படும்” என தெரிவித்தார். அதுமட்டுமின்றி, இதுதொடர்பாக முதல்வர்கள் மாநாட்டை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தெலங்கானா மாநிலத்தில் உள்ள 120 நகராட்சி, 9 மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது முடிந்துள்ளது. இதில் 120 நகராட்சிகளில் 108 இடங்களில் ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சி கைப்பற்றியது.
காங்கிரஸ் 5 நகராட்சிகளும், பா.ஜ.க மூன்று நகராட்சிகளும் இதர கட்சிகள் நான்கு இடங்களை பிடித்துள்ளது. இதேபோன்று 9 மாநகராட்சிகளில் 7 மாநகராட்சிகளில் தெலங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சி கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
சாலை விபத்தில் உயிரிழந்த தூய்மை பணியாளர் : இரங்கல் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி!
-
”இந்திய விளையாட்டின் தலைநகரம் தமிழ்நாடு” : டெல்லியில் பெருமையுடன் சொன்ன துணை முதலமைச்சர் உதயநிதி!
-
அருவருக்கத்தக்க ஆணாதிக்க மொழி : நடிகை கெளரி கிஷனிடம் சர்ச்சை கேள்வி கேட்ட YouTuberக்கு வலுக்கும் கண்டனம்!
-
“ஜனநாயகத்தை கொலை செய்யக்கூடிய முயற்சிதான் S.I.R!” : கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு!
-
“வாக்குத் திருட்டு என்ற நிலையை தமிழ்நாட்டில் நடக்க விடக்கூடாது!”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!