P Chidambaram
India

மோடி அரசால் 3 கோடியாக உயர்ந்தது வேலையில்லா திண்டாட்டம் : ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!

மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சியமைத்த நாள் முதலே நாட்டு மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது. பொருளாதார வளர்ச்சியில் சீரான நடவடிக்கை எடுக்காமல் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை மட்டுமே திண்ணமாக கொண்டு செயல்படுகிறது.

இதனால் கோடிக்கணக்கானோர் வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர். இது வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கோவையில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வேலையில்லா திண்டாட்டம் குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசியுள்ளார்.

அதில், “இந்தியாவில் கடந்த் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3 கோடி பேர் வேலையிழந்துள்ளனர். மென்பொருள் துறையில் மட்டும் 15 லட்சம் பேர் வேலையிழந்து தவித்து வருகின்றனர். கடந்த 6 ஆண்டுகளாக மோடியின் மத்திய அரசால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச நாணைய நிதியமோ பொருளாதர நிலை 4.8 என கூறுகிறது. ஆனால் பாரத ஸ்டேட் வங்கியோ 4.5 என கூறுகிறது. அந்த அளவுக்கு இந்தியாவின் பொருளாதாரத்தின் நிலை அதளபாதாளத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதுவே மோடி அரசின் பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது” என ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டினார்.

இந்தக் கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய் தத், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Also Read: “இந்தியாவுக்கு பிரதமர் மோடியால் ஆபத்து” : லண்டனின் The Economist இதழ் கடும் விமர்சனம்!