India

#CAAProtest மக்களின் உயிரைக் குடிக்கும் குடியுரிமைச் சட்டம் : பா.ஜ.க அதிகார வெறிக்கு 22 பேர் பலி !

நாடு முழுவதும் இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள், எதிர்க்கட்சியினரின் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. அறவழியில், ஜனநாயக ரீதியில் நடைபெற்று வரும் போராட்டங்களை ஒடுக்க துணை ராணுவம் மற்றும் போலிஸை கொண்டு மத்திய பாஜக அரசும், அவை ஆளும் மாநில அரசும் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு வருகிறது.

போராட்டக்காரர்கள் மீது தடியடி மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தி அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குடியுரிமை சட்டத்துக்கு எதிராக அசாமில் போராட்டம் நடைபெற்றபோது அப்பாவி இளைஞர்கள் மூவர் துப்பாக்கிச் சூட்டில் பலியாகினர். அதேபோல, பாஜக ஆளும் கர்நாடகாவிலும் 3 இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

உத்தர பிரதேசத்திலும் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடிவரும் போராட்டக்காரர்கள் மீது வன்முறையை அரங்கேற்றி வருகிறது காவல்துறை. நேற்றைய தினம் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 வயது சிறுவன் உயிரிழந்தான்.

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடியதில் இதுவரை உத்தர பிரதேசத்தில் மட்டும் 16 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக அசாம், கர்நாடகா, உத்தரபிரதேசம் ஆகிய பாஜக ஆளும் 3 மாநிலங்களில் மட்டும் 22 பேரின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகளும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.