India
கழிவு நீர்த் தொட்டிகளால் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை : தமிழகம் முதலிடம் - மத்திய அரசு அறிக்கை!
2016ம் ஆண்டு முதல் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மத்திய அரசு அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
அண்மையில் நடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் மாநிலங்களவை கூட்டத்தின் போது தேசியவாத காங்கிரஸைச் சேர்ந்த உறுப்பினர் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து எழுப்பிய கேள்விக்கு மத்திய சமூக நலத்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது.
அதில், 2016ம் ஆண்டு முதல் இதுவரை கழிவு நீர்த்தொட்டியை சுத்தம் செய்யும் போது நாடு முழுவதும் 282 பேர் உயிரிழந்திருப்பதாகவும், அதிகபட்சமாக தமிழகத்தில் 40 பேரும், ஹரியானாவில் 31 பேரும் உயிரிழந்திருப்பதாக புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2016ல் 50 பேரும், 2017ல் 83 பேரும், 2018ல் 66 பேரும் 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை 83 பேரும் உயிரிழந்திருப்பதாக மத்திய அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நாட்டில் உள்ள 17 மாநிலங்களில் 60 ஆயிரத்து 440 துப்புரவு தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருவதாகவும், அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 35 ஆயிரத்து 472 பேர் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், துப்புரவு தொழிலாளர்களை பாதுகாப்பதற்கென சட்டமே உள்ள நிலையில், மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் பணிக்கு தடை விதிக்கப்பட்டும் கழிவு நீர்த்தொட்டிகளை சுத்தம் செய்யும் துப்புரவு பணியாளர்களுக்கு அரசு உரிய உபகரணம் எதுவும் அளிக்காததாலேயே இது போன்று விஷவாயுக்கு தாக்கி உயிரிழக்கின்றனர் என தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், விஷவாயு தாக்கியதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!