India

இந்தியாவுக்கு போக வேண்டாம் - எச்சரித்த ஆஸ்திரேலியா : தேச நலன் பேசி, தலைகுனிவை ஏற்படுத்திய பா.ஜ.க

மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசால் கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடுமுழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக வடகிழக்கு மாநிலங்கள் போராட்டம் பெறும் வன்முறையாக மாறியது.

இதனையடுத்து பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவும் கொண்டுவரப்பட்டது. நாடு முழுவதும் போராட்ட சூழல் நிலவி வருகின்றனர். தொடர் அச்சுறுத்தல் நிலவி வருவதால், உள்நாட்டு மக்களே பிற மாநிலங்களுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவில் நிலவும் அசாதார சூழல் காரணமான வட கிழக்கு இந்தியா பகுதிக்கு செல்லும் மக்கள் கவனமாக இருக்கவேண்டும் எனவும் முடிந்தால் தவிர்த்துக் கொள்ளவும் அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர், கனடா மற்றும் பிற நாடுகள் தங்கள் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து, தற்போது ஆஸ்திரேலியா அரசும் இதே அறிவிப்பை தங்கள் நாட்டு மக்களுக்கும் வழங்கியுள்ளது. இதுதொடர்பாக ஆஸ்திரேலியா அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், “இந்தியாவில் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள குடியிரிமை சட்டத்தால் நாட்டில் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

சில இடங்களில் போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளது. எனவே நாட்டுமக்களுக்கு முடிந்தவரை அங்கு செல்வதை தவிருங்கள். குறிப்பாக அசாம் ஒட்டியுள்ள நாகலாந்து, மணிப்பூர், சட்டீஸ்கர் மற்றும் பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள ஜம்மு காஷ்மீர் பகுதிக்கும் செல்ல வேண்டாம். இதனை அரசின் அதிகாரப்பூர்வ எச்சரிக்கையாக சீரிய முறையில் எடுத்துக்கொள்ளுங்கள்” என அதில் குறிப்பிட்டுள்ளனர்.

பெரும்பான்மை பலத்துடன் மோடி அரசால் கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்டம் வெளிநாட்டு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: LIVE | #CAA : சென்னை, கோவையில் வெகுண்டெழுந்த மாணவர்கள்... குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தொடர் போராட்டம்!