India
“ஐ.சி.யூவில் உள்ளது நாட்டின் பொருளாதாரம்” - முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம் எச்சரிக்கை!
நாட்டின் பொருளாதாரம் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாக முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச வளர்ச்சிக்காக அரவிந்த் சுப்பிரமணியன் உருவாக்கியுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
”பணமதிப்பிழப்பு, வாராக்கடன் போன்றவற்றால் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு வழக்கமானது அல்ல. பணமதிப்பிழப்புக்கு பின் பெரிதும் பாதிக்கப்பட்ட ரியல் எஸ்டேட் துறையால் 5 லட்சம் கோடி ரூபாய் செலுத்தப்படாமல் உள்ளது. இதனால் நிதி நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதை வங்கிகளும் முற்றிலும் நிறுத்தியுள்ளன.” என அரவிந்த் குறிப்பிட்டுள்ளார்
மேலும், ”நாட்டின் வளர்ச்சி 4.5% ஆனதால் மட்டும் இந்த மந்த நிலை ஏற்பட்டுவிடவில்லை. இதற்கு நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி குறைந்ததும் ஒரு காரணமாக உள்ளது. அதுபோல, ஏற்றுமதி இறக்குமதியிலும் வருமானம் குறைந்ததும் அடங்கியுள்ளது.
இந்த நிலை தொடர்ந்தால் 1991ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலைக்கு மீண்டும் தள்ளப்பட்டுவிடுவோம் என அரவிந்த் சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.
Also Read
-
பீகார் - வாக்காளர் பட்டியல் சீரமைப்பு முறை ஆபத்தானது : இந்திய தேர்தல் ஆணையம் மீது தேஜஸ்வி புகார்!
-
”கீழடி அகழாய்வு அறிக்கையை திருத்தச் சொல்வது குற்றம், அநீதியானது” : அமர்நாத் ராமகிருஷ்ணன் !
-
”இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
-
”இது நாங்கள் உருவாக்கிய கூட்டணி” : எடப்பாடி பழனிசாமிக்கு தொல்.திருமாவளவன் பதிலடி!
-
”ஓரணியில் தமிழ்நாடு” கைகோக்கும் குடும்பங்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!