India

பாஸ்போர்ட்டில் இடம்பெற்ற பா.ஜ.கவின் தாமரை முத்திரை - வெளியுறவு செயலாளர் கூறிய ‘அடடே’ பதில்!

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் வழங்கப்பட்டுவரும் புதிய பாஸ்போர்ட்களில் அதிகாரி கையெழுத்திடும் இடத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சின்னமான தாமரை முத்திரையாக அச்சிடப்பட்டு வழங்கப்படுகிறது. இது பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, பாஸ்போர்ட்டில் தாமரை அச்சிடப்பட்டது தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டத்தின் போது கேரள மாநில காங்கிரஸ் எம்.பி எம்.கே.ராகவன் குற்றஞ்சாட்டிப் பேசியிருந்தார்.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த வெளியுறவுத் துறை செயலாளர் ரவீஷ்குமார், “இந்தியாவின் தேசிய மலர் தாமரை. போலி பாஸ்போர்ட்களை தடுப்பதற்காக கூடுதல் பாதுகாப்பு அம்சமாகவே பாஸ்போர்ட்டில் தாமரை முத்திரை அச்சிடப்பட்டு வழங்கப்படுகிறது.” எனக் கூறியுள்ளார்.

ஏற்கெனவே, தங்களுடைய மதவாத சித்தாந்தங்களை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் பல்வேறு முயற்சிகளை திட்டமிட்டு செய்துவரும் பா.ஜ.க தற்போது பாஸ்போர்ட்டில் கட்சியின் சின்னத்தை புகுத்திவிட்டு தேசிய மலர் எனக் கூறுவது மக்களை கடுமையான கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.