India
#LIVE | பற்றி எரியும் அசாம், திரிபுரா - குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டம் தீவிரம்!
Go Back BJP
"பா.ஜ.கவே திரும்பிப் போ'’ என்று அசாம் அரசு ஊழியர்கள் பதாகைகள் ஏந்தி குடியுரிமை மசோதாவை எதிர்த்துப் போராடி வருகின்றனர்.
அசாமின் முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். சில இடங்களில் வாகன டயர்களை எரித்தும் அவர்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
கிரிக்கெட் போட்டிகள் ரத்து!
அசாம் மற்றும் திரிபுராவில் நடைபெறவிருந்த ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ரத்து. குடியுரிமை மசோதாவுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் கிரிக்கெட் போட்டிகள் ரத்து.
கவுஹாத்தியில் ஆளுநர் மாளிகை, தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தின் போது வாகன போக்குவரத்தை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, போராட்டக்காரர்களைக் கலைக்க கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.
இராணுவம் குவிப்பு!
குடியுரிமை சட்ட மசோதாவை எதிர்த்து நடக்கும் போராட்டத்தை அடக்க திரிபுரா மற்றும் அசாமில் இராணுவ படைகள் குவிக்கப்படுகின்றன.
இணைய சேவை முடக்கம்!
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக அசாமில் போராட்டம் நடந்துவரும் நிலையில் இரவு 7 மணி முதல் 24 மணி நேரத்திற்கு இணைய சேவை முடக்கம்.
ரயில் சேவை ரத்து!
அஸ்ஸாமில் தீவிரமடைந்து வரும் போராட்டத்தின் காரணமாக 12 ரயில்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அருணாச்சலப் பிரதேசத்திலும் போராட்டங்கள் நடைபெறுகின்றன.
மசோதாவை திரும்பப் பெறும் வரை போராட்டம்!
குடியுரிமை சட்டத் திருத்தத்தால் தங்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகி உள்ளதாக வேதனை தெரிவிக்கும் மாணவர்கள், இந்த மசோதா திரும்பப் பெறப்படும் வரை போராட்டங்கள் தொடரும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சாலை மறியல் போராட்டங்கள்!
போராட்டத்தை, வடகிழக்கு மாநில மாணவர் சங்கமும், அனைத்து அசாம் மாணவர் அமைப்பும் தலைமையேற்று வழிநடத்துகின்றன. போராட்டத்திற்கு ஆதரவளித்து கவுஹாத்தி, கோலாகட், திப்ருகர் உள்ளிட்ட இடங்களில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு பகுதிகளில் மக்கள் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அசாம் போராட்டத்திற்கும் காரணம்?
மக்களவையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்திருத்தத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து வந்தவர்களில், இஸ்லாமியர் நீங்கலாக அனைவருக்கும் குடியுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதே அசாம் போராட்டத்திற்கும் காரணம்.
போராட்டம் வெடிப்பு!
மக்களவையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அசாம் மாநிலத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது!
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே நாடாளுமன்றத்தின் மக்களவையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் நிறைவேறியது.
இந்த மசோதாவிற்கு காங்கிரஸ், தி.மு.க, இடதுசாரி எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் உள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!